இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கிய முதல் திரைப்படமான சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் ஹீரோயின் அனுயாவின் கதபாத்திரமான சக்தியின் ஆண் நண்பராக வந்து ஜீவாவைக் கடுப்பேற்றும் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்து நிறைய ஆண்களைக் கடுப்பேற்றியவர்தான் நடிகர் ஆனந்த் சாமி. இந்தி சீரியல்களிலும், மேடை நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்த ஆனந்த் சாமி பின் நடிப்பு மீதான தீரா ஆர்வத்தில் சென்னை வந்து கூத்துப் பட்டறையில் சேர்ந்து நடிப்புக் கலை பயின்றார்.
கூத்துப்பட்டறையின் மூலமாக நிறைய நாடகங்களில் நடித்துள்ள ஆனந்த்சாமிக்கு லிங்குசாமி இயக்கிய ரன் படம் முதல் அறிமுகமானது. இதனைத் தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நிறைய படங்களில் நடித்து வந்திருக்கிறார் ஆனந்த் சாமி. ஆனால் சொல்லிக் கொள்ளும்படி எந்தக் கதாபாத்திரங்களும் ரசிகர்களைச் சென்று சேரவில்லை. இந்நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான தங்கலான் படம் ஆனந்த் சாமிக்கு நல்ல முகவரியைக் கொடுத்திருக்கிறது.
திருமணம் முடிந்த கையோடு புதுமாப்பிள்ளை தனுஷ் போட்ட நெத்தியடி பதிவு..
சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் எப்படி ஆண்களைக் கடுப்பேற்றும் சக்தியின் பெஸ்டியாக நடித்திருப்பாரோ அதேபோல் தங்கலான் படத்தில் வெள்ளைக்காரர் லார்டு கிளமௌண்ட்டின் உதவியாளராக கைலாசம் கதாபாத்திரத்தில் தனது அனுபவ நடிப்பினைக் கொடுத்திருப்பார் ஆனந்த்சாமி. எஸ்.எம்.எஸ் பட பாய் பெஸ்டியா இது என்று கேட்கும் அளவிற்கு 15 ஆண்டுகளுக்குப்பின் கைலாசம் கதாபாத்திரத்தில் ஆளே மாறிப்போய் நடித்திருப்பார் ஆனந்த் சாமி.
திறமை மிக்க திரைக் கலைஞரான ஆனந்த் சாமி கீர்த்தி சுரேஷ் நடித்த ரகுதாத்தா படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தங்கலான், ரகுதாத்தா ஆகிய படங்களில் இவரின் கதாபாத்திரங்கள் பேசப்பட்டதால் தற்போது மீண்டும் பிஸியாகி இருக்கிறார் ஆனந்த் சாமி. மேலும் சில வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.