பிக் பாஸ் 8: என் வாழ்க்கைல அப்படி நடந்ததே இல்ல.. ‘என்னம்மா சொல்றீங்க’.. தர்ஷிகாவால் ஆடிப்போன விஜய் சேதுபதி

By Ajith V

Published:

Tharshika and Vijay Sethupathi : பிக் பாஸ் நிகழ்ச்சி நான்காவது வார இறுதியை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் யாருமே எலிமினேட் ஆகவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. முன்னதாக, அன்ஸிதா அல்லது ஜாக்குலின் ஆகியோரில் ஒருவர் வெளியேறலாம் என்றும் அது அன்ஸிதாவா இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால், யாருமே இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவதில்லை என்ற தகவலும் பார்வையாளர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

இந்த வாரம் புதிதாக 6 போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வைல்டு கார்டு போட்டியாளர்கள் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகி வர, அதில் யாரெல்லாம் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய போகிறார்கள் என்பதும் ரசிகர்கள் மத்தியில் ஆவலை தொற்றிக் கொண்டுள்ளது.

நான்கு வாரங்களாக வீட்டிற்குள் இருக்கும் 15 போட்டியாளர்கள், சக போட்டியாளர்கள் பற்றி தெரிந்து வைத்திருக்க தற்போது இன்னும் 5 முதல் 6 பேர் வரை புதிதாக உள்ளே வரப்போது இன்னும் அவர்களுக்கு நிறைய சவால்களையே கொடுக்கும் என தெரிகிறது. ஆனால், அதே நேரத்தில் கடந்த சில தினங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விறுவிறுப்பு இல்லாமல் சென்றது என்பது தான் உண்மை.

தீபாவளி கொண்டாட்டங்கள் தொடர்பாக உடை, உணவு என பல பொருட்கள் பிக் பாஸ் சார்பாக கொடுக்கப்பட்டிருந்ததால் அது சற்று நெகிழ்ச்சியான தருணமாக தான் அமைந்திருந்தது. மற்றபடி சண்டை, சச்சரவுகள் எதுவுமே இல்லாமல் போக, சில போட்டியாளர்கள் பற்றி புறணி பேசிய விஷயமும் மட்டும் அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கு மத்தியில், சமீபத்தில் விஜய் சேதுபதியிடம் தர்ஷிகா பேசிய விஷயம் தொடர்பான செய்தி, தற்போது பலரையும் மனம் உருக வைத்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு புதிய உடையை விஜய் சேதுபதி அனுப்பி வைத்தது பற்றி அவரிடம் பேசிய தர்ஷிகா, “முதலில் இந்த டிரெஸ்ஸுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது ஒட்டுமொத்த வாழ்க்கையில் எனக்கென்று யாருமே டிரெஸ் எடுத்து கொடுத்ததே கிடையாதுஎன குறிப்பிடுகிறார்.

இதனை கேட்டதும், “என்ன சொல்றீங்க?” என அதிர்ச்சியுடன் கேட்கிறார் விஜய் சேதுபதி. தொடர்ந்து பேசும் தர்ஷிகா, “ஆமா சார். நான் தான் மற்றவர்களுக்கு உடை வாங்கி கொடுத்துள்ளேன். ஆனால் எனக்கு யாருமே வாங்கி கொடுத்ததில்லை. நான் தான் அம்மாவுக்கு எப்போவும் வாங்கி கொடுப்பேன். ஆனால், இப்போது எனக்காக நீங்கள் டிரெஸ் எடுத்து கொடுத்ததும் எமோஷனல் ஆகிவிட்டேன். அம்மாவுக்கு நான் தான் எடுத்து கொடுத்துள்ளேன். ஆனால் நீங்க கொடுத்த இந்த அன்பளிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுஎன கூறியுள்ளார்.