நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் அமரன் திரைப்படம் நாளை மறுதினம் தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு படத்திற்குப் புரோமோஷன் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் நடைபெற்ற அமரன் பட புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்கள் சிவகார்த்திகேயனிடம், “அந்தத் துப்பாக்கி இப்போ சினிமாவுல இல்ல… நீங்க அந்த இடத்துக்குப் போக வாய்ப்பிருக்கா? என்று கேட்டார்.
மணிவண்ணன் கொடுத்த 1500 ரூபாய்.. பதிலுக்கு இயக்குநர் அகத்தியன் செய்த நெகிழ வைக்கும் நன்றிக்கடன்..
அதற்கு சிவகார்த்திகேயன், “இல்லங்க.. அந்த சீன் சினிமாவுல நடந்த ஒரு அழகான விஷயம். அவ்வளவு தான். ஒரு சீனியர் நடிகர். அவரோட அடுத்த செட் நடிகரோட ஸ்கீரின் ஷேர் பண்ணினார் என்று மட்டும் தான் நான் அதைப் பார்க்கிறேன். மற்றபடி சினிமாவுல சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு” என்று பதில் அளித்தார்.
தி கோட் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய் துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்துவிட்டு செல்வார். அதற்கு சிவகார்த்திகேயன் நீங்க போங்க சார் உங்க வேலையை நான் பார்த்துக்கிறேன் என்று வசனம் பேசுவார். இந்த வசனம் பல விமர்சனங்களைச் சந்தித்தது. சிவகார்த்திகேயன் தொடர்ந்து கமர்ஷியல் என்டர்டெயின்மெண்ட் படங்களில் நடித்து அனைவரும் விரும்பும் நடிகராக மாறியிருப்பதால் அவரிடம் இந்தக் கேள்வி முன்வைக்கப்பட்டது.
மேலும் அடுத்தடுத்து கமர்ஷியல் கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் சிவகார்த்திகேயன் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. மேலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் குறுகிய காலத்திலேயே சிவகார்த்திகேயன் மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.