பிக் பாஸ் ஹிந்தி 18: இதுதான் தமிழ் கெத்து.. ஸ்ருதிகா செஞ்ச விஷயம்.. 18 சீசனில் முதல் முறையாக தமிழால் நடந்த மாற்றம்..

By Ajith V

Published:

Shruthika in Hindi Bigg Boss : தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட ப மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் இவை அனைத்துக்கும் முன்னோடியாக இருந்து வருவது ஹிந்தி பிக் பாஸ் தான். தமிழில் எட்டாவது சீசன் வரை வந்துள்ள சூழலில், ஹிந்தியில் 18வது சீசனை பிக் பாஸ் ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்ச்சியை ஹிந்தியில் பிரபல நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கி வரும் நிலையில் மற்ற எந்த மொழிகளிலும் காணாத சர்ச்சைகளையும், பிரச்சனைகளையும் அதே நேரத்தில் ஜாலியான விஷயங்களையும் அதிகம் கண்டுள்ளது ஹிந்தி தான்.

மற்ற மொழிகளில் இருந்து கூட ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏராளமான பார்வையாளர்கள் கவனித்து வரும் சூழலில், சமீபத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரபல நடிகை ஹிந்தியில் போட்டியாளராக நுழைந்திருந்த. ஸ்ரீ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ருதிகா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி சாம்பியனாக மாறியிருந்தர. பிரபல நடிகை என்றாலும் மிக சுட்டித்தனமாக ஸ்ருதிஹா செய்த விஷயங்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

னைத் தொடர்ந்து தற்போது அவர் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் களமிறங்கியுள்ள நிலையில், அங்கே ந்த பிரச்சனைக்கும் ஆளாகாமல் அனைத்து போட்டியாளர்களுனும் ஒற்றுமையாக இருந்து மிகச் சிறப்பாக தனது ஆட்டத்தை ஆடி வருகிறார். இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததுமே தமிழ் பேசியதுடன் மட்டுமில்லாமல் சில போட்டியாளர்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழையும் கற்றுக் கொடுத்திருந்தார்.

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் என்ற மொழிக்கு அதிகம் இடம் இல்லாத நிலையில் சர்வதேச அளவிலும் தற்போது இது கவனிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் கடந்த பதினெட்டு சீசன்களில் ஒரு முறை கூட நடைபெறாத ஒரு விஷயம், இந்த முறை நடந்துள்ளது பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம். சமீபத்தில் போட்டியாளர்களை கவனித்து பேசி இருந்த சல்மான் கான், ஸ்ருதிகாவின் கணவர் அர்ஜுன் பாங்காக்கில் இருப்பதாக குறிப்பிடுகிறார்.

தை கேள்விப்பட்டதும் ஸ்ருதிகா அதிர்ச்சி அடைய சமீபத்தில் இது பற்றி பிக் பாஸி நேரடியாக ஸ்ருதிஹா பேசுகிறார். ந்த சமயத்தில் ஹிந்தி பிக் பாஸ், நீங்கள் அர்ஜுனிடம் சொல்ல வேண்டிய விஷயத்தை என்னிடம் தமிழில் கூறும் படியும் அதை நான் அப்படியே தெளிவுபடுத்துகிறேன் என்றும் கூறுகிறார். அப்போது தமிழில் சொல்லும் ஸ்ருதிகா, ‘நான் வெளியே வருவது வரைக்கும் நீ சென்னையை விட்டு எங்கும் செல்லக்கூடாது’ என கூற அதை அப்படியே கேட்டு தமிழில் பேசுகிறார் பிக் பாஸ்.

பின்னர் இதன் அர்த்தத்தை அவர் கேட்டு தெரிந்து கொள்ள, இது தொடர்பான வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. மொத்தமுள்ள 18 சீசன்களில் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியைத் தாண்டி பிக் பாஸ் எந்த மொழியிலும் பேசியதில்லை என கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஹிந்தி பிக் பாஸையே தமிழில் பேச வைத்த பெருமை ஸ்ருதிஹாவுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.