Arnav and Anshitha : பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைவதற்கு முன்பாகவே அதிகம் விமர்சனத்தை சந்தித்து இருந்தவர் தான் அர்னவ். இவர் தனது மனைவியும், சீரியல் நடிகையுமான திவ்யாவை பிரிந்து விட்டு அன்ஸிதா என்ற நடிகையுடன் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் பெயரில் இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததால் யாரும் இதுவரை விமர்சிக்கவில்லை. இவர் காதலித்ததாக கிசுகிசுக்கப்பட்ட அன்ஸிதாவும் அதே வீட்டில் போட்டியாளராக வந்தது தான் இவர்கள் மீதான விமர்சனத்தை அதிகப்படுத்தி இருந்தது.
ஆனால் அதே நேரத்தில் அன்ஸிதா மிகத் திறம்பட பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாடி வரும் நிலையில் நாடகமாடுவதாக பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். அன்ஸிதா மிக தைரியமாக பல போட்டியாளர்களை எதிர்த்து கேள்வி கேட்டு வரும் நிலையில் அர்னவ் நல்லவன் போல இந்த வீட்டுக்குள் நடித்துக் கொண்டிருப்பதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அவரது விளையாட்டே நாடகத்தன்மை நிறைந்திருப்பதாகவும், உண்மைத்தன்மை இல்லாமல் சூழலுக்கு ஏற்றபடி அனைத்து போட்டியார்களிடமும் நட்பாகப் பழகி வருவதாகவும் பலர் தெரிவித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் சமீபத்தில் அன்ஸிதாவே அர்னவை கலாய்த்திருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.
அர்னவ் அமைதியாக இருக்க வாய் திறந்து எதுவும் பேசாமல் சைகை மூலம் அனைத்தையும் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் பேசும் அன்ஸிதா, ஏதோ கேள்வி கேட்க இதற்கும் செய்கை மூலம் அர்னவ் பதில் சொல்ல, அதுவும் புரியவே இல்லை. உடனடியாக அன்ஸிதாவோ ‘நல்லா நடி. அதையாவது பாத்துட்டு இருக்கலாம். ஓவர் ஆக்டிங் பண்றதே உன் வேலை’ என கலாய்க்கிறார்.
மேலும் அர்னவ் யாரோ சொன்னதன் பெயரில் பேசாமல் இருந்து அமைதியாக சைகை காட்டுவதாகவும், அதனை அன்ஸிதா மறைமுகமாக கேட்பதுடன் அவரை கடுமையாக விமர்சிக்கவும் செய்கிறார். சமீபத்தில் கூட தர்ஷா குப்தா ஆண்கள் அணியில் இணைந்த நேரத்தில் அர்னவ் அவரிடம் மட்டும் ஆதரவாக இருப்பதாக பேசி காட்டி இருந்தது ஆண்கள் அணியில் பிளவை ஏற்படுத்தி இருந்தது.
இதற்கு மத்தியில், மீண்டும் ஒரு முறை அன்ஸிதாவிடம் அவருக்கு நல்ல பெயர் இருக்கும் என எதிர்பார்த்தால் அவரிடம் இருந்தும் அர்னவ் பல்பு வாங்கி அசிங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.