பிக் பாஸ் 8: இது எல்லாம் ரொம்ப ஓவர்.. வீடே கலாய்த்த தர்ஷாவிடம் மனசாட்சியே இல்லாம சுனிதா கேட்ட கேள்வி..

By Ajith V

Published:

Sunitha Vs Dharsha : பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் வாரத்தில் பெரிய அளவில் ரசிகர்களை ர்க்கவில்லை என்றாலும் இரண்டாவது வாரத்தின் ஒவ்வொரு நாளும் மிக மிக அசத்தலாக தான் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரை பற்றி தெரிந்து கொள்வதற்கே கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்ட சூழலில் அதிக கன்டென்ட் கொடுத்து வந்த பேட்மேன் ரவீந்தர் எலிமினேட் ஆகியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அவர் கன்டென்ட் உருவாக்கியும் முதல் வாரம் விறுவிறுப்பு குறைந்தது போல இருந்த நிலையில் அவர் வெளியேறியதற்கு பின்னால் எப்படி மற்ற போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற கேள்வி இருந்தது. ஆனால் இதற்கு அனைத்துமே விடை கிடைத்துள்ள நிலையில் 17 போட்டியாளர்களும் மிக சுவாரஸ்யமாக தங்களின் வாய்ப்பை பயன்படுத்தி விளையாடி வருகின்றனர்.

மேலும் இந்த வாரம் ஒரு சில சண்டைகளும் அரங்கேறி இருந்த நிலையில், தர்ஷாவுக்கு ஆண்கள் அணியில் இணைந்தது தொடர்பாகவும் சில பிரச்சனைகள் உருவாகி இருந்தது. அவரை மற்ற அனைத்து ஆண்களும் ஒதுக்குவதாகவும், சில டாஸ்க்குள் என வரும்போது பெண்கள் அணிக்கு ஆதரவாக தர்ஷா குப்தா இருப்பதாகவும் விமர்சனங்கள் உருவாகி வருகிறது.

பவித்ரா ஆண்கள் அணியில் இருந்த போது கூட இந்த அளவுக்கு பிரச்சனை இல்லை என்ற நிலையில் ஒற்றுமையாக இருந்த ஆண்கள் அணியிலும் தர்ஷா என்ட்ரிக்கு பின் பிளவு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் கிங் டிவி மற்றும் குயின் டிவி என ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பிரபல தொலைக்காட்சியைப் போல நிறை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிங் டிவி Vs குயின் டிவி என்பது இந்த வார டாஸ்க்காக இருக்கும் நிலையில் அனைத்து போட்டியாளர்களும் மிக நேர்த்தியாக இதனை விளையாடி வருகின்றர். இதற்கிடையே சமீபத்தில் தர்ஷா குப்தா செய்த சட்னியை அனைவரும் கேலி, கிண்டல் செய்ய பலரும் வாந்தி எடுத்ததாகவும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும் கூறி அவரை கலாய்த்து கொண்டே இருந்தனர்.

இதன் காரணமாக தர்ஷா குப்தா கண்ணீர் விட்டதுடன் மட்டுமில்லாமல் பார்வையாளர்கள் என்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்றும் எமோஷனலாகி இருந்தார். ஆண்கள் அணியில் பலரும் இதை விட மோசமா சட்னி செய்ய முடியாது என்ற அளவுக்கு கலாய்த்து விட்டனர்.

இதற்கு மத்தியில் தான் பெண்கள் அணியில் இருந்த சுனிதா, தர்ஷா குப்தாவின் சமையல் குறித்து கேட் கேள்வி, பார்வையாளர்களை கடுப்பாக்கியுள்ளது. தனது சட்னி பற்றி ஜாக்குலின், சுனிதாகியோருடன் அமர்ந்து பேசி கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா.

அப்போது அவரிடம் கேட்கும் சுனிதா, “வேண்டுமென்றே தான் இப்படி ஒரு சட்னி செய்தாயா?” என கேட்க, ‘யாராவது வேண்டுமென்றே இப்படி செய்வார்களா. நானும் தானே அதை சாப்பிட்டேன். எனக்கு எதுவும் ஆகவில்லைஎன கூறுகிறார். இதில் தர்ஷாவிடம் சுனிதா இப்படி வேண்டுமென்றே சாப்பாட்டு விஷயத்தில் செய்வாயா கேட்டது பார்வையாளர்கள் மத்தியில் விமர்சனத்தை உருவாக்கி உள்ளது.