Bigg Boss Tamil Season 8 Day 10: அர்னவ் மீது அதிருப்தியில் ஆண்கள் அணி… அசத்தலாக நடந்த TV டாஸ்க்!

By Meena

Published:

Bigg Boss Tamil Season 8 Day 10 இல் தர்ஷா ஆண்கள் அணியில் ஒரே சண்டை மேல் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆண்கள் அணியினர் யார் இவரை இன்வால் செய்யாமல் இருந்தததால் கோட்டை தாண்டி டைனிங் ஏரியாவில் பெண்கள் அணியுடன் உக்காந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

bigg boss

அப்போது வந்த ர்வ் நீ எதுக்கு அங்க போய் உட்கார்ந்து இருக்க நீ அங்க போகக்கூடாது அப்படின்னு கேட்கிறார். உடனே தர்ஷா எனக்கு பேசுவதற்கு யாருமே இல்லன்னா யாருமே என்கிட்ட பேச மாட்டேங்கிறாங்க அதனாலதான் நான் இங்க வந்தேன் அப்படின்னு சொல்கிறார்.

உடனே அர்னவ் இல்ல ஆண்கள் அணி உன்னிடம் பேசக்கூடாது எதுவும் இன்வோல்வ் ஆகக்கூடாது என்று தான் என்கிட்ட சொன்னாங்க ஆனா நான் உன்கிட்ட இப்ப அன்பான பேசிதானே நடந்துக்கிறேன் அப்படின்னு சொல்கிறார். உடனே தர்ஷா சும்மா இருக்காமல் நேரா பெட்ரூமுக்கு போய் ஆண்களிடம் என்ன பத்தி நீங்க இப்படி சொன்னீங்களா என்கிறார்.

என்கிட்ட பேசக்கூடாது மெண்டல் டார்ச்சர் ஆகக்கூடாது என்று எக்ஸ்ட்ரா ஒரு வார்த்தையை சேர்த்து சொல்லிவிட்டார். இது பெரிய பிரச்சனை ஆகிவிட்டது. அருண், முத்துக்குமார், ஜெப்ரி, விஷால் அனைவரும் அர்னவை கூப்பிட்டு நீங்கள் எதுக்காக கேர்ள்ஸ் முன்னாடி இந்த மாதிரி தர்ஷா கிட்ட நாங்க பேசக்கூடாதுன்னு சொன்னோம் நீங்க எதுக்கு சொல்றீங்க நாங்க அப்படி சொல்லவே இல்ல.

அவளுக்கு மெண்டல் டார்ச்சர் குடுங்க நாங்க சொன்னோமா நம்ம டீமா டிஸ்கஷன் பண்ணும் போது நம்ம டீம் நல்லதுக்காக தானே சொன்னோம். கேர்ள்ஸ் அவங்க டிஸ்கஷன் பண்ணும்போது டீசண்டா நானே வெளிய வந்துருவேன் அவங்களும் என்னை கூப்பிட மாட்டாங்க அப்படித்தான் நான் இருந்தேன் அப்படின்னு முத்துக்குமார் சொல்ல அருண் பயங்கரமாக சத்தம் போடுகிறார்.

நீங்க நல்லவங்களா இருக்கணும் ட்ரை பண்றீங்களா நீங்க எதுக்கு எல்லா பெண்கள் முன்னாடி வந்து சொன்னீங்க தனியா சொல்லி இருக்கலாமே ஆனா இது நீங்க பண்றது நல்லாவே இல்லை என்று கூறிய ஆண்கள் அணியில் பயங்கர சலசலப்பு ஏற்படுகிறது. அடுத்ததாக கோடு தாண்டி கிச்சனுக்கு பெண்கள் அணியினர் வரும் போது ஒவ்வொரு தடவையும் டாஸ்க் கொடுக்க வேண்டும்.

அதை ஜாலியாக சிம்பிள் டாஸ்காக இருந்தாலும் கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும். கிச்சன் இன்சார்ஜ் ஆக ரஞ்சித்தை போட்ட போதிலும் அவர் ஒவ்வொரு தடவையும் நான் டீம் கிட்ட கேட்டுட்டு வரேன் அப்படின்னு போறது கொஞ்சம் போரிங்காகவே இருந்தது.

தொடர்ந்து பெண்களினர் வரும்போது ஏதாவது ஒரு டாஸ்க் கொடுத்துக்கொண்டே இருந்தால் அது பார்ப்பதற்கு என்டர்டைன்மெண்டாக நன்றாகவும் இருந்திருக்கும் இதனாலே அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்தது நான் பச்சை மிளகாய் எடுக்க போறேன் வெங்காயம் எடுக்க போறேன் அப்படின்னு பெண்கள் அனைவரும் வரும் போது ஒரு பிரச்சனையாக தான் தெரிந்தது.

bigg boss

அடுத்ததாக பிக் பாஸ் டிவி டாஸ்கை செய்ய சொல்லி இருந்தார் ஆண்கள் அணிக்கு கிங் டிவி பெண்கள் அணிக்கு குயின் டிவி என்று கொடுத்து நீங்கள் கேட்ட பாடல் என்ற நிகழ்ச்சியை நடத்த சொல்லியிருந்தார். அந்த டி வி டாஸ்க் மிகவும் என்டர்டைன்மென்ட் ஆக இருந்தது.

அந்த டிவி டாஸ்க் முடிந்தவுடன் அனைவரையும் வரிசை படுத்த சொல்லி Living areaவில் ஒரு டாஸ்க் நடந்தது. இன்றைய தினத்தில் மிகவும் வருத்தப்பட செய்த விஷயம் என்னவென்றால் ஜெப்பிரி பயங்கரமாக எமோஷனாகி அழுதுவிட்டார். அவர் வந்து நிற்கும்போது அனைவரும் சிரித்து விட்டனர். அதனால் மனமுடைந்து அழுதுவிட்டார் பார்ப்பதற்கே மிகவும் கஷ்டமாக இருந்தது.