Bigg Boss Tamil season 8 இல் பரபரப்பான முதல் வாரம் நிறைவடைந்து விட்டது. இன்று வார இறுதி நாள் சனிக்கிழமை விஜய் சேதுபதி வருவார் இந்த வாரம் பல சண்டை சச்சரவுகள் அழுகைகள் போன்றவை நடந்திருக்கிறது. அதையெல்லாம் எப்படி எடுத்து விஜய் சேதுபதி பேசுவார் என்று காண மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இது மட்டும் இல்லாமல் முதல் 24 மணி நேரத்தில் எலிமினேஷனான சாச்சனா சர்ப்ரைஸ் ஆக வீட்டிற்க்குள் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். வழக்கம்போல வெளியே இருந்து உள்ள வருபவர்கள் என்ன டாஸ்க் செய்வார்களோ அதையேதான் சாச்சனா செய்திருக்கிறார்.
வெளியே இருந்து நடந்தவைகளை பார்த்துவிட்டு மக்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை வைத்து உள்ள டிஸ்கஸ் செய்து கொண்டிருக்கிறார் சாச்சனா. பெண்கள் வெர்சஸ் ஆண்கள் என்பதுதான் இந்த சீசனின் கான்செப்ட் என்பதால் பெண்களை தனியாக அழைத்து எப்படி உஷாராக இருக்க வேண்டும் என்று சாட்சனா கூறுகிறார்.
அடுத்ததாக Real or Fake என்ற டாஸ்க் நடத்தப்பட்டது. பலரின் உண்மை முகங்கள் வெளியே வந்தது என்றே கூறலாம். எதற்கும் அசராத மனிதராக இருந்த ரவீந்தரே கலங்கி அழுதுவிட்டார். இப்படியாக இந்த வாரம் டாஸ்க்களும் எமோஷன்களும் ஆகவே சென்றது.
இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா உள்ளே செல்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் போட்டியாளராக இல்லை பட பிரமோஷன்காக செல்கிறார். வழக்கமாக பிக் பாஸ் வீட்டிற்குள் எந்த ஒரு புது படமானாலும் பிரமோஷன் செய்வது வழக்கம். ஏனென்றால் உடனே ரீச் கிடைக்கும்.
அதே போல் தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி மகனான சூர்யா ஃபோனிக்ஸ் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். அதனால் தனது படத்தின் பிரமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறார். அப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மகன் படமோஷனுக்காக உள்ளே வரும் நிகழ்வு எப்படி இருக்கும் சிறப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.