Bigg Boss Tamil Season 8 Contestants: போட்டியாளர்கள் முழுவிவரம்!

By Meena

Published:

Bigg Boss Season 8 நேற்று கோலாகலமாக தொடங்கியது. பலரும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்ச்சி புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார். ஆரம்பத்தில் சற்று திணறினாலும் போகப்போக இந்த நிகழ்ச்சியை நன்றாக நடத்துவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டார். இந்த சீசனில் அதிகப்படியாக விஜய் டிவியை சேர்ந்த நடிகர் நடிகைகளையே போட்டியாளராக தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். யார் யார் போட்டியாளர்கள் அவர்களது சுயாவிவரம் என்ன என்பதை இனி காண்போம்.

ravi11

1. ரவீந்தர்

ரவீந்தர் சந்திரசேகரன் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். நனும் நந்தினியும், சுட்ட காதல், முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை இவர் தயாரித்திருக்கிறார்.

sachana2. சாச்சனா

மகாராஜா திரைப்படத்தில் நடித்து மிகப் பிரபலம் அடைந்த வளர்ந்து வரும் நடிகை சாச்சனா. பின்னணியில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் மகாராஜா திரைப்படத்தின் மூலம் பேரை புகழையும் பெற்றவர்.

dharsha11

3. தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடரில் நடித்திருக்கிறார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் இரண்டில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர். இது தவிர ஜீ தமிழில் பல தொடர்களில் நடித்திருக்கிறார்.

sathya11

4. சத்யா

தமிழ் சினிமாவிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் சத்யா. இவர் பிரபல பின்னணி பாடகி ரம்யா என் எஸ் கே வின் கணவர் ஆவார். ஜீ தமிழில் அண்ணா தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

deepak11

5. வி ஜே தீபக்

இவரைப் பற்றி யாரும் அறியாதவர்கள் இருந்திருக்க மாட்டார்கள். விஜய் டிவி, ஜீ தமிழ் என பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கியவர் வி ஜே தீபக். இது தவிர சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

rj anandhi 11

6. ஆர் ஜே ஆனந்தி

ரேடியோ ஜாக்கி ஆகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் துணை கதாபாத்தில் நடிக்கும் நடிகையாகவும் பணியாற்றி வருபவர் ஆர் ஜே ஆனந்தி. இவர் கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். தனது youtube சேனல் மூலம் பல புத்தகங்களை படித்து பேசி விழிப்புணர்வை ஏற்படுத்துபவர்.

sunita 1

7. சுனிதா

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் தோன்றியிருப்பவர் சுனிதா. டான்ராக வாழ்க்கையை ஆரம்பித்து இன்று குக் வித் கோமாளில் கோமாளியாக வந்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

jeffrey

8. ஜெஃப்ரே

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கானா பாடகர் ஜெஃப்ரே.

ranjith11

9. ரஞ்சித்

1990களில் பிரபலமான நடிகராக வில்லன் நடிகராக வலம் வந்தவர் ரஞ்சித். தற்போது கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி இயக்குனராகவும் பணியாற்றுபவர். இது மட்டும் இல்லாமல் விஜய் டிவியின் பிரபல தொடரான பாக்கியலட்சுமி இல் நடித்து பிரபலமானவர்.

pavithra11

10. பவித்ரா

பவித்ரா விஜய் டிவியின் பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை ஆவார். ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடும் போன்ற வெற்றி தொடர்களில் நடித்து பிரபலமானவர் பவித்ரா.

soundarya11

11. சௌந்தர்யா நஞ்சுண்டன்

இவர் மாடலாக தனது திரையுலக பயணத்தை தொடங்கியவர். வேற மாதிரி ஆபீஸ் வெப் சீரிஸில் நடித்து பிரபலமானவர்.

arun11

12. அருண் பிரசாத்

இவரும் விஜய் டிவியின் பிரபல தொடரான பாரதிகண்ணம்மா தொடரில் நடித்து பல தரப்பட்ட ரசிகர்களை பெற்றவர்.

dharshika11

13. தர்ஷிகா

தென்றல் வந்து என்னை தொடும் என்ற விஜய் டிவியின் தொடரில் இரண்டாம் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தர்ஷிகா வளர்ந்து வரும் நடிகை ஆவார்.

vishal

14. வி ஜே விஷால்

இவர் தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தொலைக்காட்சி நடிகர். நடிகராக பாக்கியலட்சுமி தொடரில் நடித்து பிரபலமானவர்.

anshida11

15. அன்சிதா

விஜய் டிவியின் பிரபல தொடரான செல்லம்மாவில் நடித்த கதாநாயகி ஆவார்.

arnav11

16. அர்னவ்

அதே விஜய் டிவியின் தொடரான செல்லம்மாவில் நாயகனாக நடித்து பிரபலமானவர் ர்வ்.

muthukumar

17. முத்துக்குமரன்

சமூக ஊடங்களில் கருத்து தெரிவித்து பிரபலமானவர் முத்துக்குமரன். இவரின் தமிழ் உச்சரிப்புக்காகவே ரசிகர்கள் இருக்கின்றனர்.

jack1118. ஜாக்குலின்

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் தான் ஜாக்குலின். கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த முறை பெரும்பாலான போட்டியாளர்கள் விஜய் டிவியில் இருந்து வந்து இருக்கிறார்கள். விஜய் டிவியில் நடித்து பிரபலமாகி தற்போது வாய்ப்பு இல்லாமல் இருக்கும் அனைவரையும் ஒன்று சேர்த்து பிக்பாஸ்க்கு அனுப்பியது போல் இருக்கிறது. ந்த சீசன் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.