வனிதா விஜயகுமாருக்கு மறுபடியும் திருமணமா…? அவரே போட்ட பதிவு…

By Meena

Published:

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார் அவர்களின் இரண்டாவது மனைவி மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகள் தான் வனிதா. ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சையில் குறைவில்லாமல் சிக்கிக்கொண்டிருப்பவர் வனிதா. குடும்ப சொத்துக்காக னது குடும்பத்துடன் சண்டையிட்டு விஜயகுமார் குடும்பத்திலிருந்து பிரிந்து தனியாக தான் வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறார் வனிதா விஜயகுமார். இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். முதல் மகன் விஜயகுமார் குடும்பத்தினோடும், 2 மகள்கள் வனிதாவுடன் வளர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் நடிகையாக நடித்திருந்த வனிதா விஜயகுமார் பின்னர் பின்னணியில் பணியாற்ற ஆரம்பித்து விஜய் டிவியின் பிக் பாஸ் இல் போட்டியாளராக கலந்து கொண்டு பின்னர் குக் வித் கோமாளி போட்டியில் கலந்து வெற்றி பெற்றார். தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் வனிதா விஜயகுமார்.

னிதா விஜயகுமார் சர்ச்சையில் சிக்கியதில் மிகவும் முக்கியமானது திருமணம்தான். முதல் திருமணம் செய்து விவகாரத்தாகி இரண்டாவது ஒருவரை திருமணம் செய்து அவருடன் விவாரத்தாகி மூன்றாவது நடன இயக்குனர் ராபட்டுடன் ரிலேஷனில் இருப்பதாக தகவல் வெளியானது.

அதற்குப் பிறகு அதிலிருந்து வெளிவந்த வனிதா விஜயகுமார் கடந்த 2020 ஆம் ஆண்டு பால் என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டார். அவரிடம் இருந்தும் ஆறு மாதங்களுக்குள் பிரிந்து வந்துவிட்டார் வனிதா விஜயகுமார். நான்காவதா அவர் திருமணம் செய்த பால் என்ற நபர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில் இன்று வனிதா விஜயகுமார் போட்டிருக்கும் ஒரு பதிவு இணையத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அது என்னவென்றால் நடன இயக்குனர் ராபர்ட் மற்றும் னிதா விஜயகுமார் ஒரு தீவில் கடற்கரையில் இருப்பது போலவும் வனிதா விஜயகுமார் ராபர்ட் முன்பு மண்டியிட்டு ராபர்ட் கையை பிடித்து இருப்பது போலவும் கீழே வனிதா விஜயகுமார் ஹார்ட் ராபர்ட் என்று போட்டு சேவ் தி டேட் அக்டோபர் 5 என்று எழுதி பதிவிட்டிருக்கிறார். இதனால் மறுபடியும் னிதா விஜயகுமார் ஐந்தாவதாக திருமணம் செய்யப் போகிறாரா என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.