விஜய் நடிப்பில் சில தினங்களுக்கு முன் ரிலீஸான திரைப்படம் கோட். இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. எப்போதும் போல இல்லாமல் கோட் திரைப்படம் மற்ற மாநிலங்களில் கொஞ்சம் சரிவைத்தான் சந்தித்திருந்தது. ஆனால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. பெருமளவு கொண்டாடி தீர்த்தார்கள்.
தமிழ் நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 200 கோடிக்கும் மேலாக கோட் திரைப்படம் வசூல் செய்தது. மேலும் இந்தப் படத்தில் விஜயகாந்தை ஏஐ மூலம் கொண்டுவருவதாக ஆரம்பத்தில் இருந்து சொல்லி சொல்லி பெரிய ஹைப்பை ஏற்படுத்தினார்கள் படக்குழு. விஜயகாந்த் மறைவிற்கு பிற்கு அவர் ஏஐ மூலம் நடிக்கும் படம் என்பதால் விஜயகாந்த் ரசிகர்கள் உட்பட மற்ற ரசிகர்களும் ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் படம் வெளியாகி பார்த்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். ஏனெனில் விஜய் முகத்தில் விஜயகாந்த் மாஸ்கை மாட்டிவிட்ட மாதிரியான ஒரு உணர்வுதான் ரசிகர்களுக்கு இருந்தது. இருந்தாலும் அவரை மீண்டும் திரையில் பார்க்கிறோம் என்ற சந்தோஷத்தில் ரசிகர்கள் இருந்தார்கள். மேலும் விஜயகாந்துக்கான ஒரு டிரிப்யூட் தான் எனவும் வெங்கட் பிரபு கூறியிருந்தார்.
ஆனால் உண்மையான டிரிப்யூட் படம் என்றால் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படம்தான். படத்தின் இயக்குனர் விஜயகாந்தின் தீவிர வெறியராம். அதிலும் லப்பர் பந்து படத்தில் நடித்த அட்டகத்தி தினேஷும் விஜயகாந்தின் தீவிர ரசிகராரம். பொட்டு வச்ச தங்கக் குடம் என்ற பாடல் ஒலிக்க அட்டகத்தி தினேஷின் அறிமுகமாகும்.
படத்திலும் அட்டகத்தி தினேஷ் விஜயகாந்த் ரசிகராகவே நடித்திருப்பார். படம் வெற்றிப்படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த வெற்றியை ஒட்டுமொத்த படக்குழுவும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அவருக்கு மலர்வளையம் வைத்து கொண்டாடினார்கள். இந்த நிலையில் பிரஸ் மீட்டிலும் படத்தில் நடித்த ஹரீஸ் கல்யாண் பேசும் போது கூட படத்தை அனைவரும் கொண்டாடுகிறார்கள். விஜயகாந்த் சாரோட ஆசிர்வாதம் தான் படத்தின் வெற்றிக்குக் காரணம் என சொல்லியிருக்கிறார்.