ஆர்த்தியால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானாரா ஜெயம் ரவி.. பல நாட்கள் முன்னாடியே விக்ரம் சொன்ன விஷயம்..

By Ajith V

Published:

நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோருக்கு இடையேயா பிரச்சனை தொடர்பாக தான் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் அனைவரும் சர்ச்சையான கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கூட ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் அந்த அளவுக்கு காதலுடன் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்ட விஷயம் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்து வந்தது.

ஆனால் அவர்கள் இரண்டு பேருமே பிரியப் போவதாக தகவல்கள் வெளியானதால் ரசிகர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். முதலில் தானும் மனைவி ஆர்த்தியும் பிரிய போவதாக ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆனால் ஆர்த்தியோ மற்றொரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டிருந்தார். தனது கணவர் பிரியபோது தொடர்பாக எந்த முன்னறிவிப்பையும் தனக்கு தெரியப்படுத்தவில்லை என்றும் தனது குழந்தைகளை கூட நினைத்து பார்க்காமல் ஜெயம் ரவி இந்த முடிவை எடுத்துவிட்டார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி – ஆர்த்தி விவகாரம் தொடர்பாக ஆர்ஜே ஷா தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இதில் ஜெயம் ரவி தன்னிடம் தெரிவித்ததாக சில கருத்துக்களை அவர் குறிப்பிட, அதில் வெளியான விஷயங்கள் இன்னும் பூதாகரமாக வெடித்திருந்தது.

கடந்த பல ஆண்டுகளாகவே ஜெயம் ரவியால் சுயமாக பணத்தை செலவு செய்யவே முடியவில்லை என்றும் கிரெடிட் கார்டு தொடங்கி அனைத்தும் மனைவியின் கட்டுப்பாட்டில் ருந்ததாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் மாமியார் தயாரிப்பில் ஒரு சில படங்கள் ஜெயம் ரவி நடித்திருந்த போதும் அவை நஷ்டம் எனக்கூறி மீண்டும் மீண்டும் நடிக்க சொல்லி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் ஆர்ஜே ஷா குறிப்பிட்டிருந்தார்.

திருமணமானதற்கு பின்னர் தன்னால் சுதந்திரமாக எங்கே சுற்றித் திரிய முடியாமல் இருந்ததுடன் மட்டுமில்லாமல் வெளிநாட்டில் சென்று கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் கூட எதற்காக நீ இப்போது செலவு செய்தாய் என்று மனைவி போன் செய்து கேட்கும் அளவிற்கு தொந்தரவை சந்தித்து வந்துள்ளார் ஜெயம் ரவி. அப்படி ஒரு பக்கம் இருக்க, வீட்டில் இருக்கும் போது பணியாட்கள் முன்பு கூட ஜெயம் ரவியை கேவலமாக நடத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி எந்த ஆதாரம் இல்லாமல் பொய் கூட சொல்லி இருக்கலாம் என்று ஆர்த்திக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்த சூழலில் தான் நடிகர் விக்ரம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு நிகழ்ச்சியில் பேசி வீடியோ தற்போது ஜெயம் ரவி பக்கம் நியாயம் இருப்பதையும் உணர்த்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் பேசி இருந்த விக்ரம், நானும் ஜெயம் ரவியும் வெளிநாட்டுப் போகும்போது கையில் பணம் வைத்திருக்க மாட்டோம் என்றும் அப்போது ஒரு முறை ஒருமுறை என்னிடம் பணம் இல்லாமல் தான் ஜெயம் ரவியிடம் சென்று கேட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அப்போது ஜெயம் ரவியும் தன்னிடம் பணம் இல்லை என கூறிவிட்டு மனைவியிடம் வாங்கி வருகிறேன் என கூறிச் சென்றதாக விக்ரம் வேடிக்கையாக அந்த நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். அப்போது சாதாரணமாக பலரும் இந்த நிகழ்வை கடந்து சென்றாலும் தற்போது தான் அதன் பின்னர் ஜெயம் ரவி எந்த அளவுக்கு அவதிப்பட்டுள்ளார் என்பதையும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.