செருப்பை கழட்டி அடிக்கணும்… மணிமேகலை- பிரியங்கா விவகாரத்தைப் பற்றி ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்…

By Meena

Published:

மூத்த நடிகர் விஜயகுமார் அவர்களின் மகள் வனிதா விஜயகுமார். இவர் நடிகையாக தனது கேரியரை ஆரம்பித்து தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிளா குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் ஆகிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானவர்.

தற்போது சமூக வலைத்தளங்களில் நிற்காமல் தொடர்ந்து பேசப்பட்டு வருவது மணிமேகலை பிரியங்கா விவகாரம் தான். குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை தான் வெளியேறியதற்கான காரணம் பிரியங்கா தான் என்பது போல காணொளி பதிவிட்டு இருந்தார். இது சர்ச்சையை கிளப்பி இருந்தது.

தற்போது இது பற்றி பிரஸ்மீட்டில் வனிதா விஜயகுமார் ஓப்பனாக பேசியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில ஒருத்தர் மாற்றி ஒருத்தர் கலாய்க்கிறது இந்த மாதிரி எல்லாம் நடக்கிற விஷயம் தான். இது ஒரு ரெண்டு பொம்பளைக்குள் நடக்குற சண்டை. அதை இவ்ளோ பெருசா ஊதி பெருசாக்கி கேவலமா கொண்டு போறது மீடியா தான்.

அதே மாதிரி எனக்கு மணிமேகலை பிரியங்கா இரண்டு பேருமே எனக்கு தெரியும். மணிமேகலை சொல்லிட்டா அப்படிங்கறதுனால பிரியங்கா ரொம்ப கெட்ட பொண்ணு அவளுக்கு டைவர்ஸ் அதனாலதான் ஆச்சு அப்படின்னு கேரக்டர் அசாசினேசன் பண்ணி வாழ்க்கையை பத்தி ரொம்ப பேசுறாங்க. பிரச்சனைனா பிரச்சனையை மட்டும் பேசணும். அதை விட்டுட்டு ஒருத்தர் கேரக்டரை தப்பா சொல்லக்கூடாது. அவகிட்ட நான் பேசும் போது அவன் என்கிட்ட போன் பண்ணி அழுதா. இப்படி எல்லாம் பேசுறாங்க அக்கா பேமிலி ரொம்ப வருத்தத்துல இருக்காங்க அப்படின்னு சொன்னா.

அதே மாதிரி மணிமேகலை வளர்ந்து வர பொண்ணு. அவ வார்த்தைகளை ரொம்ப கவனமா பேசணும். ஏதோ அவ யூட்யூபில் சேனல்ல சொம்ப தூக்கி போடுற மாதிரி எல்லாம் ஏதோ பண்ணி இருக்கா. அந்த மாதிரி எல்லாம் பண்ணக்கூடாது அது தப்பு. ரெண்டு பொம்பளைங்களுக்குள்ள சண்டை அதை எப்படி பேசி முடிக்கணுமோ முடிக்கணும். அதை விட்டுட்டு அதை ஊதி ஊதி பெரிதாக வேண்டாம் என்று ஓபனாக பேசியிருக்கிறார் வனிதா விஜயகுமார்.