விஜய் தொலைக்காட்சி என்று சொன்னாலே சில குறிப்பிட்ட பிரபலங்களின் முகங்கள் சட்டென ஞாபகத்திற்கு வரும். அப்படி சட்டென ஞாபகத்திற்கு வரும் ஒரு பிரபலம் தான் புகழ். கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பங்கெடுத்து தொடர்ந்து பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெற்று பிரபலம் ஆனார் புகழ்.
இதனைத் தொடந்து குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலம் ஆனார். அந்த ஷோவில் இவர் செய்த லவ் அட்ராசிட்டியால் ரசிகர்களின் அதிகமான ஆதரவைப் பெற்றார். இதன் மூலம் விரைவிலேயே இவருக்கு பெரிய திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ராமர், ரோபோ ஷங்கர், பாலா, தங்கத்துரை, அறந்தாங்கி நிஷா ஆகியோர் வரிசையில் இவரும் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
வாழை படத்துல அந்த சீன் எடுக்கிறப்போ கத்தி அழுதுட்டேன்… திவ்யா துரைசாமி எமோஷனல்…
இவரது நடிப்பில் வெளிவந்த ஆகஸ்ட் 16 1947, அயோத்தி போன்ற படங்களில் புகழின் நடிப்பு பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வருகிறார் புகழ். மேலும் தனது காதலியான பென்சியை 2022-ல் கரம்பிடித்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
தற்போது புகழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தினை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றிருக்கிறார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கும் கனவு தலைவரை நேரில் பார்ப்பது. அப்படி எனக்கு கிடைத்த தருணத்தில், அவ்வளவு இயல்பாகவும், எளிமையாகவும் பேசி பழகினார். மக்கள் அவரை எவ்வளவு உச்சத்தில் வைத்தாலும் அதனை தன் தலையில் கூட ஏற்றிக் கொள்ளாத மனிதர். அதனாலேயே அவர் என்றும் சூப்பர் ஸ்டார்….” என்று அவருடன் இருந்த தருணங்களை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார் புகழ்.
தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.