பொழுதுபோக்கு

அம்மாவைப் போல் அழகும் தமிழும்.. கியூட்டாக தமிழில் பேசிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்..

தமிழ்நாட்டில் பிறந்த நடிகைகளே இன்று நுனி நாக்கில் பட நிகழ்ச்சிகளில் ஆங்கிலத்தில் பேசி வரும் வேளையில் இந்தியாவின் கனவுக் கன்னியாக விளங்கிய நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தேவரா படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் அழகுத் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சர்யப் பட வைத்திருக்கிறார்.

சிவகாசி அருகில் பிறந்து குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் இந்திய சினிமாவின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர்தான் நடிகை ஸ்ரீ தேவி. பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் போனிகபூரைத் திருமணம் செய்து மும்பையிலேயே செட்டில் ஆனார். இவர்களுடைய இளைய மகள் தான் ஜான்வி கபூர். தடக் என்ற இந்திப் படத்தின் மூலம் கடந்த 2018-ல் அறிமுகமானார் ஜான்வி கபூர். தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தவர் வெற்றி, தோல்வி ஆகிய இரண்டையும் கொடுத்துள்ளார்.

என்னோட உயிர், உலகமே நீங்கதான்.. கணவருக்கு அன்பு முத்தங்களுடன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நயன்தாரா…

தற்போது முதன் முறையாக தென்னிந்திய மொழியில் நேரடியாக நடித்துள்ள படம் தான் தேவரா. RRR படத்திற்குப் பிறகு ஜுனியர் என்.டி.ஆர். ஹீரோவாக நடித்து வெளிவரும் திரைப்படம். இதில் ஜுனியர் NTR-க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஜான்வி கபூர். தெலுங்கு மொழியில் இந்தப் படம் தயாராகி இருக்கிறது. இயக்குநர் கொரட்டல சிவா இயக்கியிருக்கிறார். மேலும் அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் புரோமோஷன் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஜான்வி கபூர் அழகாக தமிழில் பேசியதும் ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்தனர். அப்போது அவர் பேசியதாவது, “எனக்கு அம்மாவோட சிறந்த நினைவுகள் எல்லாமே சென்னையில தான். நானும் என்னுடைய குடும்பமும் இப்போ நல்ல நிலைமைல இருக்கிறதுக்கு காரணமே அம்மா மேல நீங்க காட்டுன அந்த அன்புதான். இதுக்கு நான் என்னைக்கும் கடமைப்பட்டிருக்கேன். தேவரா படத்துக்கு என்னுடைய உழைப்பை அதிகமா கொடுத்திருக்கேன். இது எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம்” என்று பேசினார்.

மேலும் ஜுனியர் என்.டி.ஆர் பேசும் போது, எனக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் ஒருபடம் நடிக்க வேண்டும் என்ற ஆசை. அதை நேரடியாக தமிழ்ப்படமாக எடுத்து தெலுங்கில் டப் செய்யலாம் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.

தேவரா திரைப்படம் செப்டம்ர் 27அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

 

Avatar photo
John A

ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.