பொதுவாகவே உலகின் பணக்காரர்கள் பட்டியல் என்று அந்த ஆண்டில் அவர்களின் சொத்து மதிப்பு, செல்வாக்கு போன்றவற்றைப் பொறுத்து மதிப்பிடுவது வழக்கம். இதுவரை அந்தப் பட்டியலில் மனிதர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள நிலையில் முதன் முறையாக ஒரு விலங்கு இடம்பெற்றுள்ளது. வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு அதிக பட்சம் தனி அறை, சொகுசு வசதிகள் செய்து வருவது வழக்கம். ஆனால் இங்கு ஒரு நாய்க்கு வசதிகள் செய்து கொடுத்தது மட்டுமல்லாமல் கோடிக்கணக்கில் சொத்துக்களையும் எழுதி வைத்திருக்கிறார் ஓர் எஜமான்.
மொத்தமே 6 பேர் தான் பாத்துருக்காங்க.. 45 ஆண்டுகளில் 2 முறை தென்பட்ட பூ.. மர்ம பின்னணி..
இத்தாலி நாட்டைச் சேர்ந்த கொர்லாட்டா என்ற பெண் தனக்கு வாரிசு இல்லாத காரணத்தினால் தனது சொத்துக்களை எல்லாம் இந்த நாய்க்கு எழுதி வைத்திருக்கிறார். இத்தாலியைச் சேர்ந்த குந்தர் என்ற ஜெர்மன் செப்பர்டு வகையைச் சார்ந்த இந்த நாய் உலகின் மிக பணக்கார நாயாக கருதப்படுகிறது. இந்த நாயின் சொத்து மதிப்பு ரூ. 3,300. கோடியாம். கேட்டாலே தலையைச் சுற்றுகிறதா.. இன்னும் முடியவில்லை. மேலும் இந்த நாயின் பெயரில் தனியாக கப்பல், விமானம் போன்றவையும் இருக்கிறது.
இந்தக் நாய்க்கு பிஎம்டபிள்யூ காரில் பயணிப்பதை மிகவும் ரசிக்குமாம். மேலும் இந்த நாய்க்கு பணிவிடை செய்வதற்காக பிரத்யேகமாக 27 பணியாட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த நாயின் சொத்துக்களை நிர்வகிப்பதற்காக தனியே அறங்காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று பலரும் தங்கள் வீட்டு செல்லப்பிராணியை வீட்டில் ஒருவர் போன்று வளர்க்கின்றனர். அண்மையில் மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் தான் வளர்க்கும் நாயின் பிறந்தநாள் அன்று அதற்கு பல லட்சம் மதிப்பில் தங்கச் சங்கிலி போட்டு அழகுபார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடுத்து வைத்த பிராணிகள் தான்.