பட்டா, பத்திரப்பதிவு, மின்சார வாரியம், கிராம நத்தம் என எல்லாமே ஒரே கிளிக்கில்.. தமிழக அரசு சூப்பர்

By Keerthana

Published:

சென்னை: பட்டா சேவைகள் பெற தனி இணையதளம், நிலம் தொடர்பான பிரச்சினைகள்-வழக்குகள் கண்டறிய தனி இணையதளம், அந்த நிலத்திற்கான சொத்து வரி, குடிநீர் வரி அறிந்து கொள்ள தனி இணையதளம், மின் இணைப்பு விவரம் அறிய தனி இணையதளம் என உள்ள நிலையில், ஒரே இணையதளத்தில் அனைத்து சேவைகளையும் தர வேண்டும் என்று முடிவு செய்து அதனை உருவாக்கி

தமிழக அரசு வழங்கும் அனைத்து சேவைகளும் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவருதால், இணையதளம் மூலமே பொதுமக்கள் அனைத்து சேவைகளையும் எளிதாக பெற முடியும் நிலை உருவாகி உள்ளது. லஞ்சம் குறைந்து வெளிப்படையான நிர்வாகத்திற்கு அடித்தளமிடும் வகையில் இதனை அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன்படி பொதுமக்கள் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற இணையதளத்தில் நிலம் தொடர்பான பட்டா, சிட்டா, வரைபடம், பட்டா பெயர் மாற்றம் ஆகிய சேவைகளை கட்டணமின்றி பெற முடியும். எனவே பொதுமக்கள் இனி 3-ம் நபர்கள் மூலம் பணம் கொடுத்து ஆவணங்கள் பெற தேவையில்லை..

இதேபோல் சுய சான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி வழங்கும் திட்டம் அண்மையில் செயல்படுத்தப்பட்டது. அடுத்தாக அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து எளிதாக மக்களுக்கு சேவை வழங்கும் பணிகளை தமிழக அரசு புதிய திட்டத்தை தொடங்கி உள்ளது.

இதன்படி முதற்கட்டமாக தமிழகத்தில் முதலீடு செய்யும் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக நிலம் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைந்து வழங்க ஒருங்கிணைந்த நில சேவை இணையதளம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது நிலம் மற்றும் அது தொடர்பான பிற சேவைகள் அனைத்தும் தனித்தனி இணையதளங்களில் சென்று பார்க்க வேண்டும். உதாரணமாக பத்திரப்பதிவு விவரங்களை பத்திரப்பதிவு துறையின் இணைய பக்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும். பட்டா சேவைகள் பெற தனி இணையதளம், நிலம் தொடர்பான பிரச்சினைகள்-வழக்குகள் கண்டறிய தனி இணையதளம், அந்த நிலத்திற்கான சொத்து வரி, குடிநீர் வரி அறிந்து கொள்ள தனி இணையதளம், மின் இணைப்பு விவரம் அறிய தனி இணையதளம் என ஒவ்வொரு இணையதள பக்கமாக சென்று பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது.

இந்த நிலையை மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து https://clip.tn.gov.in/clip/index.html என்ற இணையதளத்தை வடிவமைத்து உள்ளது. இந்த இணையதளத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற நிலங்களின் பட்டா-சிட்டா மற்றும் வரைபட விவரங்கள், பத்திரப்பதிவு விவரங்கள், நிலம் தொடர்பான கோர்ட்டு மற்றும் வருவாய்த்துறை வழக்கு விவரங்கள், மின் இணைப்பு மற்றும் கட்டண விவரங்கள், சொத்து-குடிநீர் வரி விவரங்கள் என அனைத்தையும் ஒருங்கிணைந்து மிக எளிதாக பார்க்க முடீயும். தொழில் துறையினருக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் மூலம் பொதுமக்களும் பயன்பெற முடியும்.

இந்த இணையதளம் இன்னும் முழுஅளவில் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதில் உள்ள பத்திரப்பதிவு உள்பட சில சேவைகள் இன்னும் செயல்படவில்லை. இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் பொதுமக்கள் அதில் முழு அளவிலான சேவைகளை பெற முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.