பாக்யலட்சுமி சீரியல் கோபிக்கு வந்த சோதனை..செல்பி எடுக்கலைன்னா செய்வினை வைத்துவிடுவதாக மிரட்டிய ரசிகர்..

By John A

Published:

சின்னத்திரையில் விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகனாக கோபி கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் சதீஷ்குமார் (40). இரண்டு மனைவிகளை வைத்துக் கொண்டு கோபி செய்து வரும் அட்ராசிட்டிக்கு ரசிகைகள் அதிகம். வீட்டில் இல்லத்தரசிகள் இந்த சீரியலை விரும்பி ரசித்துப் பார்க்கின்றனர். டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் இந்த சீரியலுக்கு சின்னத்திரையில் வரவேற்பு அதிகம்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சதீஷ்குமார் அவ்வப்போது ரீல்ஸ் போடுவதும் வழக்கம். இந்நிலையில் இவர் சென்னை திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார்.

அதில், கடந்த ஆண்டு கலாசேத்ரா காலனியில் உள்ள அறுபடை முருகன் கோவிலுக்குச் சாமி கும்பிடச் சென்ற போது பெண் ரசிகை ஒருவர் அவரிடம் செல்பி கேட்டுள்ளாராம். அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்திருக்கிறார். அதன்பின் அந்தப் பெண் அவருடைய மொபைல் எண்ணைப் எப்படியோ பெற்று அடிக்கடி தொந்தரவு செய்திருக்கிறார்.

பஸ்ஸில் இருந்த பிஞ்சுக் குழந்தைகள்.. ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு.. உயிரைக் கொடுத்து பிஞ்சுகளின் உயிர்காத்த கடவுள்..நிவாரணத் தொகை வழங்கிய அரசு

அவரது எண்ணை பிளாக் செய்த போதும் நேரடியாக வீட்டிற்கே வந்து மிரட்டியிருக்கிறார். மேலும் இதன் உச்சகட்டமாக குங்குமம் தடவிய எலுமிச்சம் பழத்தைக் காட்டி அவருடன் செல்பி எடுக்கவில்லை என்றால் செய்வினை வைத்து விடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்.

இதனால் பாக்யலட்சுமி கோபியான நடிகர் சதீஷ்குமார் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். தொடர்ந்து தொந்தரவு செய்யும் அந்தப் பெண்ணின் மேல் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் சதீஷ்குமார். சீரியலில் தான் கோபிக்குத் தொந்தரவு என்றால் நிஜத்திலும் இப்படி ஒரு பிரச்சினையா என நெட்டிசன்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.