போட்டோ எடுக்க டைரக்டரிடம் பெர்மிஷன் வாங்கச் சொன்ன ரஜினி.. இப்படி ஒரு தொழில் பக்தியா?

By John A

Published:

இன்று ஒரு படம் ஆரம்பித்து விட்டாலே பர்ஸ்ட் லுக், கேரக்டர் லுக் எனப் பல விதங்களில் தான் நடிக்கப் போகும் கதாபாத்திரம் குறித்து நடிகர்கள் சோஷியல் மீடியாக்களில் புகைப்படங்கள் வெளியிட்டு வரும் வேளையில் பிரபல பத்திரிகை ஒன்று ரஜினியிடம் ஸ்டில் ஒன்று கேட்க டைரக்டரிடம் பெர்மிஷன் வாங்கிட்டு வாங்க என்று அவர்களை அனுப்பி அவர் ஓகே சொல்லிய பின் விதவிதமாக போஸ் கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

பிரபல அரசியல் புலனாய்வு இதழான நக்கீரனிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த “ரஜினி ரசிகன்’’ மாத இதழுக்காக, ரஜினியின் ஒவ்வொரு படத்தின் பிரத்யேக ஸ்டில்களை அட்டையிலும் ப்ளோ-அப்பாகவும் வெளியிடுவது வழக்கம். “ரஜினி ரசிகன்’ இதழுக்காக ரஜினியும் ஸ்பெஷல் போஸ்கள் கொடுப்பார்.

இதனால் ரஜினி ரசிகர்களிடையே ரஜினி ரசிகன் இதழுக்கு ஏகோபித்த வரவேற்பு. அந்த வகையில் “பாட்ஷா’ ’படத்தின் புது கெட்டப் ஸ்டில்ஸ் எடுக்க விரும்பி, விஜயா வாஹினி ஸ்டுடியோவிற்கு நக்கீரன் குழுவினர்கள் சென்றிருந்தார்கள். படத்தில் ரஜினி எண்ட்ரியாகும் “ஆட்டோக்காரன்… ஆட்டோக்காரன்’ பாடல் காட்சி எடுப்பதற்காக செட் போட்டு ஏராளமான ஆட்டோக்களும் வந்திருந்தன. இவர்கள் சென்ற நேரம் லஞ்ச் பிரேக் என்பதால், மேக்- அப் அறையில் சிறிது ஓய்வில் இருந்தார் ரஜினி. நக்கீரன் குழுவினர் வந்த விஷயத்தை அப்போது ரஜினியிடம் சொல்லியிருக்கிறார்கள்.

டபுள் ஆக்ட் ரோலில் கலக்கிய தமிழ் சினிமா ஜாம்பவான்கள்.. அதிக படங்கள் நடித்து அசைக்க முடியா இடத்தில் மக்கள் திலகம்

பின்னர் மாடியிலிருந்து இறங்கி வந்த ரஜினி குழுவினரை பார்த்ததும், “”வந்து ரொம்ப நேரமாச்சா, சாப்ட்டீங்களா” என அன்புடன் விசாரித்ததும், “சார் இந்த கெட்டப்புல (ஆட்டோ டிரைவர்) உங்கள ஸ்டில்ஸ் எடுக்கணும்” என்றார்கள்.”ஓ.கே. தாராளமா எடுங்க, அதுக்கு முன்னால டைரக்டர்கிட்ட பெர்மிஷன் வாங்கிருங்க. ஷாட் பிரேக்ல எடுத்துக்கலாம்” என்றார் ரஜினி.

நக்கீரன் குழுவினரும் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் சென்று, “ஸ்டில்ஸ் எடுக்க ரஜினி சார் உங்ககிட்ட பெர்மிஷன் வாங்கச் சொன்னார்” என்றார்கள். “அட ஏன் சார் நீங்க வேற, இதுக்கெல்லாமா என்கிட்ட பெர்மிஷன் வாங்கணும். சாருக்கு ஓ.கே.ன்னா நோ பிராப்ளம்” என்றார். அதன் பின்தான் தென்னை மரத்தடியிலும் ஆட்டோவுக்கு அருகிலும் நின்று விதம்விதமாக போஸ் கொடுத்தார் ரஜினி. இதுதான் ரஜினியின் உயர்ந்த பண்பு, டைரக்டர்களுக்கு தரும் மரியாதை. ‘”வீரா’, “மன்னன்’, “படையப்பா’’படங்களின் ஷூட்டிங்கின்போதும் இதேபோன்ற அனுபவம் நக்கீரன் குழுவினருக்கு ஏற்பட்டது. மேலும் சூப்பர் ஸ்டாரின் தொழில் பக்தியும் மெய்சிலிர்க்க வைத்தது.