கொரானாவிலிருந்து கொஞ்சம் ரிலாக்ஸான, இந்தா அடுத்த ஆப்பு வருதுள்ள…

மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி. மதுரையில் டெங்கு காய்ச்சலால் நேற்று மட்டும் 5 பேர் பாதிக்கட்டுள்ள நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி…

corona death relief fund

மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி. மதுரையில் டெங்கு காய்ச்சலால் நேற்று மட்டும் 5 பேர் பாதிக்கட்டுள்ள நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் டெங்கு பாதிப்புக்குள்ளாகி நேற்று ஒரே நாளில் 5 பேரும், நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் மொத்தமாக 40 பேரும் சிகிச்சை பெற்று, பலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில் நேற்று பாதிக்கப்பட்ட 5 நபரில் 3 நபர் தனியார் மருத்துவமனையிலும், 2 நபர் அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரை சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த 4 வயது பெண் குழந்தை டெங்கு பாதிப்பால் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்து உள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன