முக கவசத்திலும் வந்துட்டாங்க நடிகர்கள்

ஆனா இது புதுசா இருக்குங்க புதுசா இருக்குன்னு வடிவேலு சொல்வாரே அதுமாதிரி இந்த கொரோனா வந்தாலும் வந்தது புதிய புதிய கண்டுபிடிப்புகளாக மாஸ்க்கிலும் புதுமை புக ஆரம்பித்து விட்டது. கொரோனா வருவதற்கு முன்பு வரை…

ஆனா இது புதுசா இருக்குங்க புதுசா இருக்குன்னு வடிவேலு சொல்வாரே அதுமாதிரி இந்த கொரோனா வந்தாலும் வந்தது புதிய புதிய கண்டுபிடிப்புகளாக மாஸ்க்கிலும் புதுமை புக ஆரம்பித்து விட்டது.

dcdb11ac4d44c14a276fc961edb47098

கொரோனா வருவதற்கு முன்பு வரை இந்த மாஸ்க் விற்பனை என்பது கடுகளவு கூட இருக்காது. மிக அவசரமான சில விசயங்களுக்கு மட்டுமே மாஸ்க் பயன்படுத்தப்பட்டது. ஆஸ்துமா, டிஃபி நோயாளிகள் கூட டாக்டர் சொல்வதை கேட்காமல் மாஸ்க் கட்ட மாட்டர்.

இந்த கொரோனா வந்த உடன் அனைவரும் மாஸ்க் அணிந்தே ஆக வேண்டும் என்ற நிலை வந்த உடன் மாஸ்க் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.எல்லோரும் மாஸ்க் அணிய ஆரம்பித்து விட்டனர்.

சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்து ராணி வித விதமாக தன் உடைகளுக்கேற்றவாறு மாஸ்க் அணிந்திருந்தது சமூக வலைதளங்களில் கேலியாக வந்தது.

கேரளா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒரு பெண் உடைகளுக்கேற்ற மேட்சிங் மாஸ்க் கிடைப்பது இல்லை என கூறினார். இதுவும் வைரலானது.

இப்போது புதிதாக ரஜினி, கமல், அஜீத், விஜய் என்று வெறிபிடித்த ரசிகர்களுக்காக மேற்கூறிய நடிகர்களின் அவர்களது முகம் பிரிண்ட் செய்யப்பட்ட மாஸ்க்குகள் தயாரிக்கப்படுகின்றன.

திருப்பூரில் இது தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு செல்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன