isha

ரஜினி ரசிகர்கள் செய்த ரகளை: தடியடி நடத்தி கலைத்த போலீஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய தர்பார் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் வினியோகஸ்தர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இடையே…


30fd1aba8bea85fb891502bf22fa8eb7

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய தர்பார் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் வினியோகஸ்தர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வெளியாகவில்லை

இந்த நிலையில் திண்டுக்கல் நகர் பகுதியில் தர்பார் திரைப்படம் வெளியாக வில்லை என்பதால் ஆத்திரமடைந்த ரஜினி ரசிகர்கள் தியேட்டரில் முன்பு கூடி திடீரென அங்கிருந்த பேனர்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது

இதனை அடுத்து காவல்துறைக்கு தியேட்டர் நிர்வாகத்தினர் தகவல் கொடுக்க காவல்துறையினர் விரைந்து வந்து ரஜினி ரசிகர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பதட்டமாக காணப்பட்டது. இருப்பினும் தர்பார் படம் திண்டுக்கல் பகுதியில் இன்று மதியம் முதல் வெளியாகும் என கூறப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன