டெல்லியில் இன்று: 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா!!!

இன்றைய தினம் டெல்லியில் பெரும் முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. அந்த வகையில் இன்றைய தினம் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்தது. 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது.

இந்த விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர் உள்ளிட்ட பிரிவுகளில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன.

கடந்த முறை தேசிய விருதுகளில் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பால்கே விருது அளிக்கப்பட்டது. மேலும் சிறந்த இசையமைப்பாளர்காக விசுவாசம் படத்தை இசையமைத்த டி. இமானுக்கு விருது அளிக்கப்பட்டது.

மேலும் அசுரன் நாயகன் தனுஷிற்கும் விருது கிடைத்தது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கும் விருது அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து எந்தெந்த படங்கள் மற்றும் படத்தில் நடித்தவர்கள் என யார் யாருக்கு விருதுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.