சிவாஜியுடன் நடித்து எம்.ஜி.ஆருடன் நடிக்க ஆசைப்பட்ட 5 நடிகைகள்!

தமிழ் சினிமாவின் 60,70 கால கட்டத்தில் முன்னணி ஹீரோவாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் இணைந்து நடிக்க அனைத்து நடிகைகளும் வரிசையில் நிற்பார்கள். ஆனால் திறமையாக நடித்தும் சில நடிகைகளால் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்க வில்லை.

அந்த வரிசையில் முதலில் இருப்பது நடிகை சுஜாதா, இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என எல்லா மொழிகளிலும் நிறைய படங்கள் நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் பிரபலமான முன்னணி நடிகையாக 70களில் டாப் ஹீரோக்களான சிவாஜி, ஜெய்சங்கர், சிவகுமார், விஜயகுமார், முத்துராமன், கமலஹாசன், ரஜினிகாந்த், சத்யராஜ் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆனால் நடிகை சுஜாதா, எம்.ஜி.ஆரோடு சேர்ந்து நடிக்கவே முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 1986-ல் மண்ணுக்குள் வைரம் படத்தில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடிகை சுஜாதா திறமையாக நடித்திருப்பார். ஆனால், சிவாஜிக்கு திரையுலக போட்டியாக இருந்த எம்ஜிஆருடன் இணைந்து ஒரு படம் கூட நடிக்க முடியவில்லை.

இரண்டாவதாக நடிகை ஸ்ரீவித்யா

தமிழ் சினிமாவின் 40 ஆண்டுகளில் 800க்கு மேற்பட்ட படங்களை நடித்து பிரபலத்தின் உச்சியில் இருந்த நடிகை ஸ்ரீவித்யா. நடிகை ஸ்ரீவித்யாவும் சிவாஜி கணேசனுடன் இணைந்து இமயம், எழுதாத சட்டங்கள் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீவித்யா திருவருட்செல்வம் என்னும் படத்தில் குழந்தை நட்சத்திராமாக 1966ல் அறிமுகமானதிலிருந்து கடைசி வரைக்கும் இவர்களால் எம்ஜிஆர் உடன் நடிக்க முடியவில்லை.

மூன்றாவதாக நடிகை உஷா நந்தினி

தமிழ் சினிமாவின் 1970களில் வெளியான எல்லா திரைப்படங்களிலும், அதுவும் குறிப்பாக மலையாள படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை உஷா நந்தினி. இவர் தமிழில் சிவாஜி கணேசனுக்கு கதாநாயகியாக பொன்னூஞ்சல், கவுரவம், ராஜபார்ட் ரங்கதுரை என இன்னும் நிறைய படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். இந்த மாதிரி அடுத்தடுத்து சிவாஜியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்த இவருக்கு எம்ஜிஆர் கூட நடிக்க வேண்டும் என ஆசை வந்துள்ளது. ஆனால் நடிகை உஷா நந்தினிக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்க வில்லை.

நான்காவதாக நடிகை பிரமிளா

தென்னிந்திய படங்களில் 70, 80 கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தது மட்டும் இல்லாமல் நடிகை பிரமிளா மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்து கலக்கியுள்ளார். அதிலும் குறிப்பாக நடிகை பிரமிளா கவர்ச்சி நடிகையாக நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டு நீங்காத இடம் பிடித்துள்ளார். மேலும் 50க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்த இவரின் தாய் மொழி தமிழ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை பிரமிளா சிவாஜியுடன் இணைந்து மனிதரில் மாணிக்கம், தங்க பதக்கம், கவரிமான், ரத்த பாசம் என நிறைய படங்களில் நடித்துள்ளார்.

3 மனைவி, 7 குழந்தைகள்… சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோக்கள் வியக்கும் ஹீரோவாக வாழ்ந்த டி. எஸ் பாலையா குறித்த பல தகவல்கள்!

ஆனால், எம்ஜிஆரின் படங்களில் நடிக்க ஆசை பட்ட இவருக்கும் எந்த வாய்ப்பும் சரிவர அமையவில்லை என்பது தான் உண்மை.

ஐந்தாவதாக நடிகை ஸ்ரீதேவி

தென்னிந்திய சினிமாவின் 70, 80களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நிறைய படங்களில் நடித்துள்ளார். 300க்கு மேற்பட்ட படங்கள் நடித்து காலத்தால் அழிக்க முடியாத புகழை பெற்ற இவர் சிவாஜியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார்.

ஆனால் நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்ஷத்திரமாக எம்.ஜி.ஆருடன் நடித்துள்ளார். ஆனால் கதாநாயகியாக இணைந்து நடிக்க வில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...