33 வருடத்தை நிறைவு செய்யும் விக்ரம்

சுஜாதா எழுதிய விஞ்ஞானக்கதை இது. தமிழ்சினிமாவில் கம்ப்யூட்டரை முதன் முதலில் இந்தப்படத்தில்தான் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். இந்திய ராக்கெட்டை தீய சக்திகள் சிலர் வெளிநாடுக்கு கடத்துவதும் அதை மீட்க போலீஸ் அதிகாரியான விக்ரம் சலாமியா என்றொரு நாட்டுக்கு செல்வதும் அந்த நாடே வித்தியாசமான நாடாக இருக்க, அங்கு சென்ற கமல் அந்த நாட்டு இளவரசி டிம்பிள் கபாடியாவை காதலிக்க ஒருபக்கம் கமலின் உதவியாளர் லிசி கமலை காதலிக்க இப்படி இருகோணகாதல் கதையும், இதற்கு பின்னால் ராக்கெட்டை அதிரடியாக மீட்டு கமல் கொண்டு வருவது கதை.


அந்த நேரத்தில் ரஜினி கமலை வைத்து அதிரடி படங்களை இயக்கிய ராஜசேகர் இயக்கி இருந்தார். இளையராஜா இசையமைத்து இருந்தார். பாடல்கள் அனைத்தும் தேன் சொட்டியது இப்படத்துக்கு பலம். குறிப்பாக கண்ணே ஒட்டிக்கவா கட்டிக்கவா, பாடல் அந்நாளைய வாலிப நெஞ்சங்களை கிறங்கடித்தது. இன்னொரு பாடலான மீண்டும் மீண்டும் வா பாடலில் இசைக்கருவிகள் அதிகம் பயன்படுத்தாமல் வாயிலேயே ஜும் ஜும்க்கும் என்று சொல்லியே அதிரடியாக அந்த பாட்டை இசையமைத்து இருப்பார்.

ஏன் ஜோடி மஞ்சக்குருவி என்ற பாடலும் மிகப்பெரும் ஹிட்.



மன்னராக பிரபல ஹிந்தி நடிகர் அம்ஜத்கான் நடித்திருந்தார். எல்லாரையும் விட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தது இப்படத்தில் வில்லனாக நடித்த சத்யராஜ்தான் அலட்டலான பார்வை பேச்சு, சொக்கலால் பீடி குடிச்சுக்கிட்டு இருந்த நீ மதகுரு ஆயிட்டியா என மற்றொரு வில்லனை பார்த்து நக்கல் பேசுவது என படத்தில் கலக்கி இருப்பார்.

இப்படத்தில் சொல்லப்படும் சலாமியா என்ற நாடு ராஜஸ்தானிலேயே படமாக்கப்பட்டு கற்பனைக்காக சலாமியா என்ற பெயர் வைக்கப்பட்டது. இன்றளவும் இந்த ஊரில் ஒரு புகழ்பெற்ற எலிக்கோவில் உள்ளது. இங்கு உள்ளது போல் வேறு எங்கும் எலியை பார்க்க முடியாது. அவ்வளவு எலிகள் இங்கு உள்ளன.

அந்தக்கோவிலில் சில காட்சிகள் இப்படத்துக்காக எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இங்கு காணப்படும் எலிகளை பார்த்து ரசிகர்கள் பிரமித்து போயினர்.

கடந்த 1986ம் ஆண்டு ஜனவரி பொங்கலுக்கு வெளியாவதாக இருந்து அது முடியாமல் ஏப்ரல் தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளியிட இருப்பதாக இருந்து அதிலும் வெளியிட முடியாமல் மே 29ல்தான் வெளியிடப்பட்டிருக்கிறது இப்படம் இந்த வருடத்தோடு இப்படம் 33வது வருடத்தை எட்டுகிறது.

Published by
Staff

Recent Posts