இளையராஜாவின் பிளே லிஸ்ட்டில் இந்தப் பாட்டை மிஸ் பண்ணிடாதீங்க.. Folk-ல் Western கலந்து சுழன்றடித்த இசை

இசைஞானி இளையராஜாவின் இசையில் எண்ணற்ற பிளே லிஸ்ட் உருவாக்கி வைத்திருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்தப் பாடலும் அவரின் பிளே லிஸ்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று. இந்தப் பாடலை பலர் கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் கேட்டவர்களோ இந்தப் பாட்டை ரிபீட்மோடில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இளையராஜா செய்த எத்தனையோ இசை அற்புதங்களில் இந்தப் பாடலும் ஒன்று.

அந்தப் பாடல் தான்

ஏரியிலே எலந்த மரம்
தங்கச்சி வச்ச மரம் (வச்ச மரம்)
தங்கச்சி வச்ச மரம் (வச்ச மரம்)
ஒரு காயும் இல்ல பூவும் இல்ல
ஒன் தங்கச்சி வச்ச மரம்
என்ற பாடல் அது.

1981-ம் ஆண்டில் இயக்குநர் ரெங்கராஜன் இயக்கத்தில் பிரதாப் போத்தன், ஸ்ரீபிரியா நடிப்பில் உருவான படம் தான் கரையெல்லாம் செண்பகப்பூ. எழுத்தாளர் சுஜாதாவின் கரையல்லாம் செண்பகப்பூ நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே தலைப்பில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் க்ரைம் திரில்லர் படமாக விளங்கியது. இந்தப் படத்தில் கிராமத்திற்கு இசை ஆராய்ச்சியாளராக வரும் பிரதாப்போத்தன் அங்குள்ள சிறுவர்களுக்கு பாடல் சொல்லிக் கொடுப்பது போன்று அமைந்த காட்சியில் தான் இந்தப் பாடல் உருவாகியிருக்கும்.

அப்பாவும், மகனும் இசையால் ஆட்டிப் படைத்த இதயம்.. 80, 90களின் காதலர்களை உருக வைத்த காதல் தீம்…

இந்தப் பாடலில் முதலில் நாட்புறப் பாடல் போன்று ஆரம்பித்து பின்னர் மேற்கத்திய பாணியில் பாடல் சென்று இறுதியில் நாட்டுப்ற பாடல் வகையில் முடிவுது போன்று மெட்டமைக்கப் பட்டடிருக்கும். இதுமட்டுமின்றி இந்தப் பாடலில் வரும் கிட்டார் இசையை வாசித்தவர் கங்கை அமரன். இளையராஜாவின் எவர்கிரீன் மாஸ்டர் பீஸ் பாடல்களில் இதுவும் ஒன்று. மேலும் இந்தப் பாடலை இயற்றியவர் பஞ்சு அருணாச்சலம்.

இந்தப் பாடலை இளையராஜவே பாடியிருப்பார் உடன் எஸ்.ஜானகியும், குழுவினரும்  பாடியிருப்பார். இளையராஜாவின் இசையில் மேலும் ஒரு மகுடம் சூட்டியது இந்தப் பாடல். கண்டிப்பாக இசை ரசிகர்கள் ஒவ்வொருவரின் பிளே லிஸ்ட்டில் இருக்க வேண்டிய பாடலும் கூட. இதுபோன்று இன்னும் எண்ணிலடங்காத எத்தனையோ பாடல்கள் இசைஞானியின் கைவண்ணங்களில் உருவாகியிருக்கிறது. சும்மாவா பெயர் கொடுத்தார்கள் இசைஞானி என்று.. !

Published by
John

Recent Posts