பொழுதுபோக்கு

தனுஷ் குரலில் மேகம் கருக்காதா… 30M கடந்து புதிய சாதனை!!

இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்துள்ளார்.

அதே போல் தனுஷ்க்கு ஜோடியாக ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாரதிராஜா ஆகியோரின் நடிப்பானது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28-ம் தேதி இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்ற நிலையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சூழலில் தற்போது திருச்சிற்றம்பலம் புதிய சாதனையை படைத்துள்ளது. அதன் படி, தற்போது 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

மேலும், திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியது குறிப்பிடத்தக்கது

Published by
Revathi

Recent Posts