22 ஆண்டுகால விசுவாசம். ஊழியருக்கு 1 கோடி மதிப்பில் கார் பரிசளித்த முதலாளி!

22 ஆண்டுகளாக தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றிவரும் தொழிலாளிக்கு அவரது விசுவாசத்தைப் பாராட்டும் வகையில் முதலாளி 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் கார் ஒன்றினை பரிசாக வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சார்ந்தவர் ஏ.கே.ஷாஜி,  இவர் பல ஆண்டுகளுக்கு முன் மைஜி என்ற நிறுவனத்தைத் துவக்கியுள்ளார்.

தற்போது சிறப்பாக செயல்பட்டுவரும் இந்த நிறுவனம் பல கோடி லாபங்களை ஈட்டும் நிறுவனமாக உள்ளது.

இந்த நிறுவனத்தில் தலைமை வணிக மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வருபவர்தான் சிஆர் அனிஷ், இவர் இந்த நிறுவனத்தில் 2000 ஆம் ஆண்டு நுழைவு நிலைப் பணியில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

அதன்பின்னர் தன்னுடைய பணி அனுபவத்தால் தலைமை வணிக மேம்பாட்டு அதிகாரி என்ற நிலைக்கு பதவி உயர்வு பெற்று வேலைபார்த்து வருகிறார்.

ஊழியரின் விசுவாசத்தைப் பாராட்டும் வகையில் ஷாஜி 1 கோடி மதிப்பிலான பென்ஸ் காரினைப் பரிசாக கொடுத்து தொழிலாளியை மகிழ்வித்துள்ளார்.

ஷாஜி ஏற்கனவே மைஜி நிறுவனத்தில் 20 ஆண்டுகளைக் கடந்து வேலைபார்த்துவரும் ஊழியர் ஆறு பேருக்கு 6 காரினைப் பரிசாக வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.