12 ஆம் வகுப்பு மதிப்பெண் செல்லுபடியாகாது.. நுழைவுத் தேர்வுதான்.. திட்டவட்டமாக அறிவித்த UGC!

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதித் தேர்வினை எழுதியுள்ளனர். 12 ஆம் வகுப்பு மாணவர்கள் படித்து முடித்து கல்லூரியில் சேர தயாராகி வருகின்றனர்.

இந்தநிலையில் மத்தியப் பல்கலைக் கழகங்களில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என UGC என்னும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

அதாவது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 13 வகையான மொழிகளில் கல்லூரிப் படிப்பில் சேருவோர் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே கல்லூரியில் சேர முடியும்.

மேலும் இனி 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிப் படிப்பில் சேர முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இந்த அறிவிப்பினைக் கேட்ட மாணவர்கள் என்னது நுழைவுத் தேர்வா? என்று அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.

 

 

Published by
Gayathri A

Recent Posts