பெற்ற தாயை நடுத்தெருவில் விட்ட 7 பிள்ளைகள்.. 101 வயதில் வைராக்கியத்தோடு உழைக்கும் பாட்டி!

தஞ்சாவூர் மாவட்டத்தின் அருகே உள்ள பொட்டுவாஞ்சாவடியைச் சார்ந்தவர்  குழந்தையம்மாள். இவர் நடைபாதையில் பழம் விற்றுப் பிழப்பு நடத்தி வருகிறார். இவரின் வயது 101. இவருக்கு 17 வயதில் ஆரோக்கியசாமி என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது.

ஆரோக்கியசாமி- குழந்தையம்மாள் தம்பதிக்கு மொத்தம் 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள். கூலி வேலைக்குச் சென்றாலும் ஆரோக்கியசாமி மகன்கள் மற்றும் மகள்களை நன்கு படிக்க வைத்துள்ளார்.

மேலும் மகள்களுக்கு 50 சவரன் நகை போட்டு திருமணமும் செய்து வைத்துள்ளார். ஆரோக்கியசாமி இறந்துபோன பின்னர் குழந்தையம்மாளை தங்களது வீட்டில் தங்கவைக்க மகன்களும் மகள்களும் பெரிய அளவில் சண்டை இட்டுக் கொண்டுள்ளனர்.

இதனால் மனம் நொந்த குழந்தையம்மாள் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அதன்பின்னர் பொட்டுவாஞ்சாவடி வந்த அவர், பழங்களை விலைக்கு வாங்கி விற்பனை செய்யத் துவங்கியுள்ளார்.

56 ஆண்டுகளாக பழங்களை விற்று அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் சாப்பிட்டு வருகிறார். மேலும் அவர் தன்னுடைய தள்ளுவண்டியில்தான் மழை, குளிர் மற்றும் கோடை காலங்களில் தங்கிக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இந்த செய்தி காண்போரைக் கலங்கச் செய்தாலும், குழந்தையம்மாள் வைரக்கியத்தோடு நான் உயிரோடு இருக்கும் வரை உழைப்பேன் என்று மார்தட்டிச் சொல்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews