லட்சுமி கடாட்சம் எப்போதும் கிடைக்க இதை மட்டும் செய்தால் போதும்… தேவர்களுக்கே கிடைக்காத பேறு நமக்கு…?!

எப்போதும் நாம் மனநிறைவுடனும், நிம்மதியுடனும், ஆரோக்கியத்துடனும், செல்வ வளத்துடனும் இருக்கவே ஆசைப்படுவோம். ஆனால் அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நாம் ஒருபோதும் அறிவதில்லை. அதை தெரிவிக்கும் வகையில் இன்றைய மார்கழி 30 (14.1.2023) திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவைப் பாடல்களில் பார்க்கலாம்.

Pongal 3
Pongal

மார்கழி 30வது பாடலை நாம் தை திருநாளாகக் கொண்டு திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருப்பாவைக்கான பாடல்களைப் பற்றிப் பார்ப்போம்.

இன்று தை திருநாள். திருப்பள்ளியெழுச்சியின் 10வது நாள் பாடல்.

Markali 30
Markali 30

புவியினில் போய் பிறவாமையில் நாள் நாம் என்று தொடங்குகிறது. அதாவது இதை தேவர்கள் எல்லாம் பாடுவது போல மாணிக்கவாசகர் பாடுகிறார். பூமியில் போய் நாம் பிறக்காததனால சிவபெருமானால ஆட்கொள்ளமுடியாதவராக நாம் மாறி விட்டோம்.

திருமால் உள்ளிட்ட தேவர்கள் எல்லோரும் வருத்தப்படுறாங்க. ஆனால் நல்லவேளை…பெருமானே நாங்கள் பூமியில் பிறந்துவிட்டோம். எங்களை ஆட்கொண்டு அருள்வாயாக..அந்த அழகான பாங்கு மிக உயர்ந்தது என்று இங்கு பெருமானை வாழ்த்துகிறார் மாணிக்கவாசகர்.

இந்தப்பாடலில் மாணிக்கவாசகர் தேவர்களுக்கும் கிடைக்காத பேறு மனிதர்களுக்குக் கிடைக்குமா என்று கேள்வி எழுப்புகிறார். அதே நேரம் அது கண்டிப்பாகக் கிடைக்கும் என்றும் சொல்கிறார்.

இந்தத் திருப்பள்ளியெழுச்சியையும், திருவெம்பாவையையும் நாம் 30 நாள்களும் பாராயணம் பண்ணினால் பிறவிப்பிணி நீங்கும். இந்தப் பாடல்களுக்கு அந்த அற்புத மகிமை உண்டு. இந்த உலகில் என்னென்ன நலன்கள் வேண்டும் என்று நாம் வேண்டுகிறோமோ அதற்கான பலன்கள் இந்தப் பாடலைப் பாடி இறைவனை வழிபடும்போது நிச்சயம் உண்டு.

இம்மை, மறுமை நலன்களும் கிடைக்கும். எவ்வளவு பாவங்கள் இருந்தாலும் உணர்ந்து நாம் மன்னிப்பு கேட்கும்போது அந்தப் பாவங்களில் இருந்து நம்மால் விடுதலை அடைய முடியும்.

கிடைத்தற்கரிய அற்புதமான அந்த இறைவனின் திருவடி நிழலில் நமக்கு இடம் கிடைக்கும். இப்படி இதன் பெருமைகளை நாம் சொல்லிக்கொண்டே போகலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கிடைத்ததற்கரிய இறைவனின் திருவடிகள் எங்களுக்கு கிடைக்க நாங்கள் பெரும்பேறு பெறுகிறோம் என இறைவனிடம் அழுது தொழுகிறார் மாணிக்கவாசகர்.

நோய்களிலிருந்து விடுதலை, அடியார்களுக்கு வறுமையின்றி, வாழ்க்கையில் மிகப்பெரிய பேறான இறைவனையே நாம் வசமாக்கும் திறன் ஆகியவை கைகூடுகிறது. அதனால் செல்வம் நம்மை தேடி வருகிறது.

வரக்கூடிய செல்வமும் தங்கி நிற்க வேண்டும். அதுதான் முக்கியம். அதற்கான பெரும் கருணையை இறைவன் அளிக்கிறார். அதற்காகத் தான் இந்தப் பாடல்களைப் பாராயணம் செய்ய வேண்டும் என்று அன்றே மாணிக்கவாசகர் சொல்லியிருக்கிறார்.

திருப்பாவையில் இன்று வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை என்று ஆரம்பிக்கிறாள் ஆண்டாள்.

Thiruppavai 30
Thiruppavai 30

இந்தப்பாடலில் ஆண்டாள் நாச்சியார் எம்பெருமானின் பெருமைகளைப் பற்றி எவ்வளவு பேசினாலும் பேசிக்கொண்டே இருக்கலாம். அதற்கு எல்லையே கிடையாது. இந்த உலக மக்கள் எல்லோரும் நலன் பெற வேண்டும் என்பதற்காக அருள்புரிந்து கொண்டு இருக்கின்ற அந்த அரங்கப் பெருமானைப் பற்றி வெகு அழகாகப் பதிவு செய்துள்ளார்.

தான் யார்? தன்னை வளர்த்த தந்தை யார் என ஆண்டாள் சொல்கிறார். முதல் பாடலில் மார்கழித் திங்கள் என்றார். அதில் நந்தகோபரின் மகன் கண்ணன் என்கிறார். அதனால் நிறைவுறும் இந்தப் பாசுரத்தில் தான் யார் என்று சொல்கிறார். பெரியாழ்வாரின் பெண்பிள்ளையாகிய ஆண்டாள் நாச்சியார் நான் அருளிய இந்த 30 நாள் பாடல்களையும் தப்பாமல் யாரெல்லாம் பாராயணம் செய்து வருகிறார்களோ அவர்களுக்கு அற்புதமான நலன்கள்கிடைக்கும். தந்தைக்கு உயர்வு கொடுக்க வேண்டும் என்பதையே ஆண்டாள் இந்தப் பாடல்களில் வலியுறுத்துகிறார்.

பெரியாழ்வார் தானே கண்ணனைப் பற்றி அவருக்கு சிறுவயதில் பாடம் போதித்துள்ளார். அதனால் அந்த நன்றிக்கடனை மறக்காமல் தந்தைக்குப் பெருமை சேர்த்து இருக்கிறாள் ஆண்டாள்.

இந்தப் பாடல்களைப் பாராயணம் செய்தவர்களின் இல்லத்திலும், உள்ளத்திலும் நாராயணர் மார்பில் உறைந்துள்ள அந்த மகாலெட்சுமி வாசம் செய்வாள். தன் கணவனைப் பற்றி பெருமையாகப் பேசுவது முக்கியம் என்ற கருத்தையும் இங்கு வலியுறுத்துகிறார் ஆண்டாள். அதனால் தான் மகாலெட்சுமி மகாவிஷ்ணுவின் மார்பில் உறைந்து இருப்பதாகக் கூறுகிறாள்.

எவ்வளவு நலன்களை வேண்டுகிறார்களோ அல்லது எல்லை மீறிய நலன்களையும் மகாலெட்சுமி நிறைவாகத் தருகிறாள். மகாலெட்சுமிக்கே நாயகன் ஆதலால் செல்வத் திருமால் என்று ஆண்டாள் சொல்கிறார். அதனால் தொடர்ந்து இந்தப் பாடல்களைப் பாராயணம் செய்து மகாலெட்சுமியின் அருள்கடாட்சத்தைப் பெறுங்கள்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews