ரண களத்திலும் ஒரு கிலு கிலுப்பா.. ராணுவ வீரர்களுக்காக ரஷ்ய அரசு செஞ்ச விஷயம்!

ரஷ்யா உக்ரைனை கடந்த சில நாட்களாக வான் வழி, தரை வழி மற்றும் நீர் வழி என மூன்று வழிகளிலும் போரைத் துவக்கி கடுமையாகத் தாக்க உலகின் பல நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்தன.

ஒரு மாதத்திற்கும் மேலாக உக்ரைனுக்கு எதிரான தாக்குதலினை ரஷ்ய ராணுவ வீரர்கள் நடத்தி வருகின்றனர். இதுவரை நடந்த போரில் ரஷ்ய வீரர்கள் 1321 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3825 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இவர்களுக்கான சிகிச்சையானது இராணுவ வீரர்களுக்கான மருத்துவமனையில் செய்யப்பட்டு வருகின்றது. ஒரு மாதத்திற்கும் மேல் போரில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்கள் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.

ராணுவ வீரர்களின் மன அழுத்தத்தைப் போக்க எண்ணிய ரஷ்ய அரசு இசை நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. இந்த இசை நிகழ்ச்சியில் ரஷ்ய ராணுவ வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews