இது திராவிட மாடல் அரசல்ல, தீண்டாமைக்கொடுமை அரசு: சீமான் ஆவேசம்

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இது திராவிட மாடல் ஆட்சி என பெருமையுடன் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் இது திராவிட மாடல் ஆட்சி அல்ல தீண்டாக்கொடுமை ஆட்சி என நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதி தமிழ் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தீர்க்க தொட்டியில் மலத்தினை கலந்த தீண்டாமை வன்கொடுமை புரிந்த சமூக விரோதிகளை கைது செய்ய முடியாத திறனற்ற ஆட்சி தான் திமுக ஆட்சி என்றால் இந்த ஆட்சிக்கு திராவிட மாடல் என்ற பெயர் அல்ல என்றும் தீண்டாக் கொடுமை அரசு என்றுதான் இனி அழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வேங்கை வயல் தீண்டா கொடுமை வழக்கினை தமிழ்நாடு அரசு மேலும் காலம் தாழ்த்தி நீர்த்து போகச்செய்யாமல் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

தீண்டாமை கொடுமை வழக்கின் குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை என்று ஒப்புக் கொள்ளும் வகையில் காவல்துறையினரே இந்த வழக்கினை குற்றப் புலனாய்வுத்துறைக்கு மாற்றுவதாக கூறுவது காவல்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சருக்கு அவமானம் என்றும் முதலமைச்சர் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார் என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதற்கெடுத்தாலும் குழு அமைக்கும் திமுக அரசு சமூக நீதி கண்காணிப்பு குழு வேங்கை வயல் கிராமத்தில் நடந்தது என்ன என்று விசாரணை செய்ய குழு அமைக்காதது ஏன் என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews