ஆண்டுக்கு 8500 கோடி வருமானம்.. மிரள வைக்கும் பில்லியனரின் எளிய வாழ்க்கை.. சைக்கிள், ஆட்டோ என கலக்கும் ஸ்ரீதர்வேம்பு!

இன்று நம்மில் பலர் 5 இலக்க சம்பளத்தையே வாங்குவதற்கு படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படியே சற்றே அதிகமாக 50,000க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் உடனே ஆடம்பரத்தை நாட ஆரம்பித்துவிடுகின்றனர். EMI ல் காஸ்ட்லியான பைக், குடும்பத்துடன் வெளியில் செல்ல கார், பிளாட் என EMI வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இவற்றிற்கெல்லாம் சற்றே வித்தியாசமானவர்தான் ஸ்ரீதர் வேம்பு. இவரைப் பற்றிய அறிமுகமே தேவையில்லை. ZOHO என்ற பெயரைச் சொன்னால் போதும் ஐடி துறையே அலறும். இவரது நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சும்மா கொஞ்சம் கம்மி தான். ஜஸ்ட் 8000 கோடி. கேட்கும் போதே கண்ணைக் கட்டுதா. இப்படி வருடத்திற்கு 8,000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் ஒரு ஐடி நிறுவனத்தின் முதலாளிதான் இந்த ஸ்ரீதர் வேம்பு.

எல்லாம் ஓ.கே. இன்னும் 50 தலைமுறைக்குத் தேவையான சொத்து, ஆயுள் முழுக்க நிம்மதியான வாழ்க்கை. நினைத்தால் அடுத்த சில மணிநேரங்களிலேயே கண்முன் கிடைக்கும் ஆடம்பரம் என சகல வசதிகள் இருந்தாலும் ஸ்ரீதர்வேம்பு அவற்றையெல்லாம் விரும்பவில்லை. எளிமையான வாழ்க்கையை வாழ உறுதி பூண்டார். நாம் புத்தரைப் பற்றிப் படித்திருப்போம். நாட்டின் இளவரசனாக இருந்தும் ஆசைகளைத் துறந்து துறவறம் பூண்டு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்.

அதேபோல் தான் நம்மூர் ஸ்ரீதர் வேம்புவும். பல்லாயிரம் கோடிக்கு அதிபதியானபோதும் நிம்மதி எங்கே என்று தேடிப்போக தென்காசி அருகில் ஒரு கிராமத்தைத் தேர்வு செய்தார். இப்போது அங்கே தனது விருப்பப்படி எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு அலுவலகப் பணிகளை அங்கிருந்தே கவனிக்கிறார். சாதாரண கிராமத்து மனிதராய் எளிய வேட்டி சட்டை அணிந்து கொண்டு, மாலை வேளைகளில் சைக்கிளில் கிராமத்தைச் சுற்றிவந்து இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை மேற்கொள்கிறார் ஸ்ரீதர் வேம்பு.

சப்தமே இல்லாமல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் செய்த உதவிகள்..அடேங்கப்பா இத்தனை கோடிகளா?

தற்போது இதில் அடுத்தபடியாக புதிதாக ஒரு எலட்ரிக் ஆட்டோவை வாங்கியுள்ளார் ZOHO அதிபரான ஸ்ரீதர் வேம்பு. இவ்வாறு தான் புதிதாக வாங்கிய எலக்ட்ரிக் ஆட்டோவில் பயணம் செய்வதை பெருமையாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். உலக அளவில் மென்பொருள் துறையின் ராஜாவாகத் திகழும் ZOHO நிறுவனத்தின் அதிபர் ஆசை, பற்றைத் துறந்து இயற்கையின்பால் ஈர்க்கப்பட்டு இன்று மிக எளிய வாழ்வு வாழ்ந்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார் ஸ்ரீதர் வேம்பு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...