சப்தமே இல்லாமல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் செய்த உதவிகள்..அடேங்கப்பா இத்தனை கோடிகளா?

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் கொடைத் தன்மையை நாடே அறியும். இல்லையென்று வந்தவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்து வாழ வைத்த வள்ளல் அவர். இதனால் தான் அவரை மக்கள் அவரை இன்னமும் இதய தெய்வமாக தங்கள் இல்லங்களில் வைத்து வழிபடுகின்றனர். ஆனால் எம்.ஜி.ஆர் செய்த உதவிகள் வெளிச்சத்திற்கு வந்த அளவிற்கு நடிகர் திலகம் செய்த உதவிகள் பல வெளிச்சத்திற்கு வரவில்லை என்பது தான் உண்மை.

இங்கே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் செய்த சில தர்மங்களை நாம் காணலாம். சினிமா வரலாற்றில் சுமார் 40 வருடங்களில் சிவாஜி கணேசன் செய்த உதவிகளின் மதிப்பு சுமார் 310 கோடியைத் தாண்டும் என தகவல்.கடந்த 1953 முதல் 1993 வரை சிவாஜி கணேசன் செய்திருக்கும் தர்மத்தினை வரலாற்று ஆசிரியரும், திரைப் பிரபலமுமுமான மருதுமோகன் என்பவர் ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறார்.

இந்த ஆய்வுக் கட்டுரையில் சிவாஜிகணேசன் குறித்த பல பொக்கிஷத் தகவல்கள் கொட்டிக் கிடக்கிறது. இலங்கையில் ஒரு மருத்துவமனை கட்டிக் கொடுத்துள்ள சிவாஜி கணேசன், பெருந்தலைவர் காமராசர் துவக்கி வைத்த மதிய உணவுத் திட்டம் மற்றும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அறிமுகப்படுத்திய பல திட்டங்களுக்கு அந்தக் காலத்திலேயே 1லட்சம் நன்கொடை கொடுத்துள்ள முதல் நடிகர் சிவாஜி மட்டுமே.

1965-.ல் இந்திய பாகிஸ்தான் போர் நடைபெற்ற பொழுது, அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியைச் சந்தித்து போர் நிவாரண நிதியாக தன்னிடம் இருந்த 100 பவுன் எடையுள்ள தங்கப் பேனாவை நன்கொடையாகக் கொடுத்தது மட்டுமின்றி அவருடைய மனைவி கமலா அம்மையார் அணிந்திருந்த 400 பவுன் நகைகளையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்றால் அவரது நாட்டுப்பற்றை அறிந்து கொள்ளலாம்.

பசிக் கொடுமையால் தவித்த எம்.ஜி.ஆர்.. பின்னாளில் ஐ.நா.சபையே புகழ்ந்த சத்துணவுத்திட்டத்திற்கு வழிவகுத்த வறுமை

அமேரிக்காவில் உள்ள குழந்தைகள் பூங்காவிற்கு குட்டி யானை ஒன்றினை பரிசாக அளித்திருக்கிறார். இதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல புகழ்பற்ற ஆலயங்களுக்கு, குறிப்பாக திருவாணைக்காவல், தஞ்சை புண்ணைநல்லூர் மாரியம்மன் கோவில் போன்றவற்றிற்கு யானைகளை தானமாகக் கொடுத்திருக்கிறார்.

ஒருமுறை யானைப்பாகன் சிவாஜி ஐயாவிடம் யானையும், தானும் சரியாச் சாப்பிட முடியவில்லை என்று உதவி கேட்டபொழுது இரண்டு ஏக்கர் நிலத்தினை வாங்கி அதைப் பட்டா போட்டுக் கொடுத்து அந்தப் பாகனிடம் அதில் விவசாயம் செய்து நீயும் யானையும் வயிராற உண்ணுங்கள். யானைக்கு பட்டினி போட்டு விடாதே என்று அனுப்பியிருக்கிறார்.

மேலும் பெருந்தலைவர் காமராசரின் மீது அளவற்ற பற்றுக் கொண்டதால் தன் சொந்த செலவில் அவரின் முழு திருவுருவச் சிலைகளை தமிழகம் முழுவதும் திறந்து வைத்துள்ளார் நடிகர் திலகம். இப்படி பல எண்ணிலடங்கா தர்மங்களைச் செய்த சிவாஜி ஒருபோதும் அதை பொது வெளியில் கூறியது கிடையாது என்றால் அவரின் எளிமையையும், நல்ல குணத்தையும் நாம் அறியலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...