பட்டி தொட்டி எல்லாம் இனி நம்ம பாட்டு தான்… விஜய் படத்திற்காக தரமான சம்பவம் செய்யும் யுவன்!

தளபதி விஜய் தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபட தொடங்கி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அடுத்த மாதம் 19ஆம் தேதி லியோ திரைப்படம் திரைக்கு வர உள்ளதால் போஸ்ட் ப்ரொடெக்க்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் டப்பிங் பணியை விஜய் முடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

லியோ படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியானதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த எதிர்பார்ப்பு விஜய்யின் அடுத்த படம் மீதும் திரும்பியுள்ளது.

விஜய், வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கூட்டணியில் உருவாகும் தளபதி 68 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அந்த வகையில் விஜய் அமெரிக்காவுக்கு சென்று உள்ள நிலையில் அவருடன் வெங்கட் பிரபு, தயாரிப்பு நிறுவனமும் சென்றுள்ளது. அங்கு தளபதி 68 படத்திற்கான முதற்கட்ட வி எஃப் ஐ பணிகள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் அமெரிக்காவில் லாஸ் அஞ்செல்ஸ் நகரில் உள்ள யுனிவர்சிட்டி ஒப் தி சஜன் கெலிபோர்னியா இன்ஸ்டவுட் ஒப் கிரியேட்டிவ் டெக்னாலஜி என்னும் வி எஃப் ஐயில் சிறந்து விளங்கும் நிறுவனத்திற்கு நடிகர் விஜய் மற்றும் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சென்றுள்ளதாக தகவல் வெளியானது.

இங்கு தளபதி 68 படத்தின் 3டி மாடலிங் , விஜய்யின் பாடி ஸ்கினிங் நடை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் அமெரிக்காவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விஜய்யின் புகைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் தளபதி 68 படத்தின் ஓப்பனிங் பாடல் குறித்து அப்டேட்ஸ் ஒன்றை யுவன் வெளியிட்டுள்ளார். பொதுவாக விஜய் படத்தின் ஓப்பனிங் பாடல் என்றால் ஆறு மாத குழந்தை முதல் 60,70 வயது முதியவர் வரை பாடி, ஆடி கொண்டாடுவது வழக்கம். விஜய்யும் அந்த ஓப்பனிங் சாங்கிற்கு பயங்கரமாக டான்ஸ் ஆடி எனர்ஜியை தெறிக்க விடுவதே அதற்கு காரணம்.

அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் இருந்து நா ரெடி பாடல் வெளியானது. ஆனால் இந்த பாடல் படத்தில் ஓப்பனிங் பாடல் இல்லை என்றும், பிளாஸ் பேக்கில் வரும் பாடல் என்றும் கூறப்படுகிறது. மேலும் விஜய் நடிப்பில் அதற்கு முன்னதாக வெளியான வாரிசு படத்திலும் ஓப்பனிங் பாடல் மெலோடியாகத் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கஷ்டப்பட்டு பாடினேன்… இப்படியா சொதப்பி வைப்பீங்க…. என எஸ்.பி.பி கோபப்பட்ட ஒரே பாடல்!

விஜய்யின் குத்து பாடலுக்கு ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு யுவன் தரமான அப்டேட்ஸ் கொடுத்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார். சமீபத்தில் எஸ்ஆர்எம் காலேஜ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள யுவன் தளபதி 68 படத்தில் மாஸான தர லோக்கல் பாடலை ஒன்று உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதால் பாடல் கூடுதல் சிறப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கீதை படத்திற்கு பிறகு 20 வருடங்கள் கழித்து விஜய் – யுவன் கூட்டணியில் உருவாகும் பாடலுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகின்றனர்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...