கஷ்டப்பட்டு பாடினேன்… இப்படியா சொதப்பி வைப்பீங்க…. என எஸ்.பி.பி கோபப்பட்ட ஒரே பாடல்!

தமிழ் சினிமாவில் தனது இனிமையான குரலால் இசை ரசிகர்களை கட்டி போட்டவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி முதல் விஜய், அஜித் வரை நான்கு தலைமுறைகளுக்கு மேலாக பாடல்களை பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் பத்தாயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி சாதனை படைத்தவர்.

80, 90களில் இளையராஜாவின் இசையில் இவர் பாடிய அனைத்து பாடல்களுமே மாஸ் ஹிட் தான். ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சத்யராஜ், மோகன், ராமராஜன் என அப்போது முன்னணி ஹீரோக்களாக இருந்த எல்லோருக்கும் இவர் பாடல்கள் பாடியுள்ளார். இப்போதும் பலரும் விரும்பி கேட்கும் இளையராஜாவின் பாடல்களில் பெரும்பாலானவை எஸ்.பி.பி பாடியது தான்.

சிறந்த பாடகருக்கான பல விருதுகளை பெற்றுள்ள இவர், இளையராஜா மட்டுமில்லாமல் ஏ.ஆர் ரகுமான், ராஜ் குமார், மரகதமணி, தேவா, சங்கர் கணேஷ் , வித்தியா சாகர், பரத் வாஜ் என பல இசையமைப்பாளர்களின் பாடலில் பாடியுள்ளார். அந்த வகையில் திரையுலகில் பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல் பாடிய பாடகர் எஸ்.பி.பியாக தான் இருப்பார்.

மேலும் எஸ்.பி.பி பல திரைப்படங்களில் காட்சிக்கு ஏற்றவாறு தனது குரலை மாற்றியும் பாடியிருப்பார். 80களில் இளையராஜாவின் இசையில் பல பாடல்கள் அப்படி பாடியுள்ளார். அதாவது படத்தின் ஹீரோ மாறுவேடத்தில் வில்லன் முன்பே வந்து பாட்டு பாடி நடமாடுவார். அதற்காக குரலில் வித்தியாசம் காட்டி இருப்பார் எஸ்.பி.பி.

வாரிசு நடிகர் பேச்சு என்னோடு போகட்டும்.. லைக்கா நிறுவனத்திற்கு விஜய் போட்ட கண்டிஷன்!

அப்படி எஸ்.பி.பி வித்தியாசமாக பாடிய பாடலை அதாவது ஹீரோவின் கெட்டப்பையும் மாற்றி எடுத்தால் மட்டுமே செட்டாகும். ஆனால் அவர் அப்படி பாடிய பாடல் ஒன்றை சாதாரணமாக எடுத்து சொதப்பி வைத்த போது எஸ்.பி.பி கோபப்பட்ட சம்பவமும் சினிமாவில் நடந்துள்ளது.

ரஜினி நடித்து 1983ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பாயும் புலி. இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ஆடி மாசம் காத்தடிக்க என்கின்ற பாடலுக்கு தனது வழக்கமான குரலை மாற்றி வேறு மாதிரி எஸ்.பி.பி பாடி இருந்தார். ஆனால் இந்த பாடலுக்கு ரஜினி கெட்டப் மாற்றாமல் அப்படியே நடித்திருப்பார்.

இதைப் பார்த்த எஸ்.பி.பி, ‘எவ்வளவு கஷ்டப்பட்டு பாடினேன் இதற்காகத்தான் என்னை அப்படி பாட வைத்தீர்களா? இதுக்கு நான் எப்பவும் போலவே பாடியிருப்பேன்’ என இயக்குனருடன் கோபப்பட்டுள்ளார். இப்படி தன் குரலால் அனைவரையும் கட்டிப்போட்ட எஸ்.பி.பியை தமிழ் சினிமாவிற்கு முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஆனால் முதன்முதலில் பாடகராக அறிமுகப்படுத்தியவர் கோதண்டபாணி என்கின்ற ஒரு இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...