எண்ணிலடங்கா விருதுகள்.. ரசிகர்களை கவரும் பாடல்கள்.. கான கந்தர்வன் யேசுதாஸின் இசைப்பயணம்!

கர்நாடக இசை கலைஞரான கான கந்தர்வன் கே.ஜே.யேசுதாஸ் எஸ் பாலச்சந்தர் இயக்கிய பொம்மை திரைப்படத்தில் பின்னணி பாடகராக தமிழில் அறிமுகமானார். தனது 50 ஆண்டுகால திரை வாழ்க்கையில் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், லத்தின், ஹிந்தி, குஜராத்தி என பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

விழியே கதை எழுது என எம்.ஜி.ஆர்க்கு பின்னணி பாடி, இசைஞானி இளையராஜா காலத்தில் உச்சத்தை அடைந்தார். தமிழிலும் யேசுதாஸ் பாடிய கல்யாண தேன் நிலா, என் ஜீவன் பாடுது, ஈரமான ரோஜாவே, ஏதோ நடக்கிறது இதமாய் இருக்கிறது, பச்சைக்கிளிகள் தோலோடு என எம்.எஸ்.வி, இளையராஜா, ரஹ்மான், சந்திரபோஸ் என பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி சிறப்பான பாடல்களை பாடியுள்ளார்.

மிகவும் அமைதியான சங்கீத்துவமான பாடல்களை பாடிக்கொண்டிருந்த கே.ஜே யேசுதாஸ் லோக்கலான போக் சாங் பாட முடியுமா என்றால் முடியும் என்று சிந்து பைரவியில் வரும் தண்ணி தொட்டி தேடி வந்த பாடலை பாடி நிரூபித்துள்ளார்.

கர்நாடக இசையில் வல்லவரான கே.ஜே.யேசுதாஸ் சிறப்பான அய்யப்ப பக்தர். இவர் பாடிய ஹரிவராசனம் பாடலே இன்றும் புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில் இரவு நடை அடைக்கும் முன் அய்யப்பனை தாலாட்டி பூஜை செய்யும் பாடலாக உள்ளது. அதேபோன்று பொய் இன்றி மெய்யோடு நெய்கொண்டு போனால் பாடலும் ஜேசுதாஸ் பாடிய அய்யப்பன் பாடல்களில் புகழ்பெற்றது.

இவரது பாடல்களுக்கு இவருக்கு  தனி ரசிகர் கூட்டமே உள்ளது அதிலும் ரசிகர்கள் இவரை கான கந்தர்வன் என்றே அழைப்பார்கள். இவரது திறமையை பாராட்டும் விதமாக எந்த பாடகருக்கும் கிடைக்காத அளவுக்கு யேசுதாஸ் எட்டு தேசிய விருதுகள் வாங்கியுள்ளார்.

அதோடு கலைகளுக்கு செய்த பங்களிப்பை பாராட்டி இந்திய அரசு 1975 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும் 2012 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் 2017 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கி சிறப்பித்தது இதைப் போன்று சாகித்ய அகாடமி விருது சங்கீத கலாசிகாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளையும் யேசுதாஸ் பெற்றுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews