தீபாவளிக்கு பெரிய போட்டி இருக்கா?.. கங்குவா vs கோட் vs விடாமுயற்சி ஒரே நாளில் மோத போகிறதா?..

கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ரஜினிகாந்தின் வேட்டையின் திரைப்படங்கள் வரும் ஜூன் மற்றும் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகிவிட்டன.

இந்நிலையில், அஜித்தின் விடாமுயற்சி விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் மற்றும் சூர்யாவின் கங்குவா உள்ளிட்ட படங்கள் தீபாவளி ரேசில் மோதுமா என்கிற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விஜய், அஜித் மற்றும் சூர்யா மோதல்?:

ஒரே நாளில் கிளாஷுக்கு வாங்கடா என ரசிகர்கள் போட்டியிடும் முடிவுக்கு சென்று விட்டனர். தமிழ் சினிமாவின் மூன்று முன்னணி நடிகர்களின் பிரம்மாண்ட படங்கள் ஒரே நாளில் வெளியானால் அது நிச்சயம் அந்த மூன்று படங்களுக்குமே வசூல் ரீதியாக வெற்றியை கொடுக்காது என்பது நிதர்சனம்.

ஆனால் யார் பெரியவன் என்கிற போட்டியில் அஜித் மற்றும் விஜய் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு படங்களை இறக்கியது போல இந்த ஆண்டு கோட் மற்றும் விடாமுயற்சி தீபாவளிக்கு போட்டியாக வெளியாகுமா? அந்த போட்டியில் சூர்யாவின் கங்குவா படமும் பங்கேற்குமா என்கிற கேள்விகள் தற்போது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதத்தை எழுப்பி இருக்கிறது.

தீபாவளி ரேஸ்:

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உஷாராக இந்த ஆண்டு மோதலை தவிர்த்துவிட்டு வசூல் வேட்டையை நடத்த வேண்டும் என்கிற குறிக்கோளுடன் ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களை தேர்வு செய்துவிட்டனர். ஆயுதபூஜை பண்டிகையை ரஜினிகாந்த் தேர்வு செய்திருக்கும் நிலையில், வேட்டையன் படத்துக்கு போட்டியாக விஜய் நடித்துள்ள கோட் படம் வெளியாகுமா? என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

விஜய் மற்றும் ரஜினிகாந்த் இடையே சோசியல் மீடியாவில் கடும் சண்டைகள் ரசிகர்கள நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு படங்கள் எப்படி ரிலீஸ் ஆகப் போகின்றன என்பதே ஒரு பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

பெரிய படங்கள் போதிய இடைவெளியில் வெளியானால் மட்டுமே கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் உயரும் என்றும் எல்லாரும் ஒரே நாளில் வந்து முட்டிக் கொண்டால் அது அவர்களுக்குத்தான் நஷ்டம் என்றும் கூறுகின்றனர்.

விடாமுயற்சி இந்த ஆண்டு தீபாவளிக்கு வருமா? அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளிப் போகுமா? என்கிற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...