ஒரே படத்தில் வாங்கிய பலத்த அடி!.. அதற்கு மேல் அந்த திசையிலேயே தலை வைத்துப் படுக்காத த்ரிஷா!..

பல நடிகைகள் திரைத்துறையில் புதிதாக அறிமுகமாகி இருந்தாலும் த்ரிஷாவின் இடத்தை பிடிக்க யாராலும் முடியவில்லை. புதிய நடிகைகள் எல்லாம் நான்கு ஐந்து படங்களில் வாய்ப்புகளை இழந்து வரும் நிலையில் த்ரிஷா இத்தனை ஆண்டுகளாகவும் சினிமாவில் தனக்கென்று இருக்கும் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். மேலும், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் த்ரிஷா ஏன் இந்தி படங்களில் நடிப்பதில்லை என்ற காரணத்தை கூறியுள்ளார்.

பாலிவுட் படங்களை தவிர்க்கும் த்ரிஷா

நடிகை த்ரிஷா பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக அனுராதா என்ற துணை காதாபாத்திரத்தில் நடித்து தன் திரை வாழ்க்கையை தொடங்கினார். அதை தொடர்ந்து சூர்யாவின் மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அப்படம் பரவலாக பேசப்பட்ட நிலையில் த்ரிஷாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடிவந்தது. சாமி, அலை, கில்லி, கிரீடம், பீமா, மன்மதன் அம்பு உள்ளிட்ட பல படங்களில் விஜய், அஜித், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, சிலம்பரசன் போன்ற பல பிரபலாமான நடிகர்களுடன் நடித்து சினிமாவில் முன்னணி நடிகை வரிசையில் இடம் பிடித்தார். மேலும் த்ரிஷா சிலம்பரசனுடன் நடித்திருந்த காதல் காவியமான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் 2010ல் இருந்த இளைஞர்கள் மனதில் நிலையாய் நின்றது போக தற்போது ரீ ரிலிஸானபோதும் இளைகர்கள் மற்றும் காதலர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.

தமிழ் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் வர்ஷம் படம் மூலம் தெலுங்கிலும் எண்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து அத்தடு, நந்து, பங்காரம், ஸ்டாலின், சைனிகுடா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அஜித்குமாருடன் மங்காத்தா படத்திற்கு பின் சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த த்ரிஷா சகலகலா வல்லவன், என்னை அறிந்தாள், அரண்மணை2, நாயகி, கொடி போன்ற பல படங்களில் நடித்து தோல்வியை சந்தித்தார்.

அதை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் நடித்திருந்த த்ரிஷாவிற்கு விமர்சன ரீதியாக பெரிய அளவில் பாரட்டுக்கள் வந்து குவிந்தது. மேலும், பேட்ட, பொன்னியின் செல்வன், லியோ உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்காமல் நின்றுவிட்டார்.

இந்தி படம் ஓடல

trisha hindi

தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற பெரும்பாலான படங்களில் நடித்துள்ள த்ரிஷா இந்தியில் அக்‌ஷய் குமாருடன் காட்டா மேத்தா படத்தை தவிற வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை, அதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய த்ரிஷா, நான் பெரும் எதிர்ப்பார்ப்புடன் நடித்திருந்த கட்டா மேத்தா படம் சரியாக ஓடாததால் பாலிவுட்டின் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை. மேலும், அதற்காக நான் மும்பையில் செட்டிலாக முடியாது, அப்படி செய்தால் இங்குள்ள சிலவற்றை நான் இழக்க வேண்டியிருக்கும், அதோடு புதிதாக என் கெரியரை தொடங்க ஆர்வமில்லை, இதுவே தான் இந்தியில் தான் நடிக்காததற்கு காரணம் எனக் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews