ஏன் தல தலன்னு சுத்துறாங்க தெரியுமா..? அஜீத் பற்றி ரங்கராஜ் பாண்டே உடைத்த ரகசியம்

இந்தியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் கடந்த 2016-ல் வெளியான பிங்க் திரைப்படம் தமிழில் நேர்கொண்ட பார்வை என்னும் பெயரில் அஜீத் நடிப்பில் கடந்த 2019-ல் வெளியானது. படத்தின் தலைப்பே மகாகவி பாரதியாரின் கவிதையான ‘நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை..’ என்னும் கவிதை வரிகளில் அமைந்தது. மேலும் அஜீத் கதாபாத்திர பெயரும் பரத் சுப்பிரமணியம் எனறு இருக்கும். இது சுப்ரமணிய பாரதி என்பதை அப்படியே மாற்றி அமைக்கப்பட்டிருக்கும். ஹெச். வினோத் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் அஜித்துடன் நீதிமன்றத்தில் பரபரப்பாக வாதாடும் வழக்கறிஞராக அறிமுகம் ஆனவர் தான் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே. படத்தில் அஜித்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்குமோ அதே அளவு இவருக்கும் வழங்கப்பட்டிருக்கும். இயக்குனர் ஹெச்.வினோத் பாண்டேவை இந்த கதையில் நடிக்க தயார்படுத்தியவுடன் 6 மாதமாக படத்தின் பணிகளுக்காக தயாரிப்பு அலுவலகம், இயக்குனருடன் சந்திப்பு என அலைந்துள்ளார். ஆனால் கடைசிவரை அஜீத்தை கண்ணில் காட்டவே இல்லை.

குர் ஆனுக்கு இவர் உரை எழுதுவதா? கண்ணதாசனுக்கு எழுந்த சிக்கல்.. அல்லாஹ் அருளால் எழுதிய ஹிட் பாடல்

இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்கும் நாள் வந்தது. அப்போதுதான் முதன் முறையாக அஜீத்தை சந்திக்கிறார் பாண்டே. ஹைதராபாத்தில் பாண்டேவை முதன் முறையாக சந்தித்த அஜீத் அவரை ஆரத் தழுவி நலம் விசாரித்திருக்கிறார். அதன் பின் இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு அதிகமானது. கிட்டத்தட்ட 15 நாட்கள் அஜீத்துடன் பணியாற்றி இருக்கிறார் பாண்டே.

அப்போது அஜீத் பாண்டேவிடம் இவர் பத்திரிகையாளர் என்பதால் சற்று அளவாகவே பேசியிருக்கிறார். பின்னர் இந்த இடைவெளி குறைந்து இருவரும் நன்றாகப் பேசியுள்ளனர். அஜீத் பற்றி பாண்டே கூறும் போது, ”மிக சிறந்த மனிதர். பழகி பார்த்தால்தான் தெரியும். அஜீத்துக்கு அரசியல் பற்றிய பார்வை உண்டு. என்பெயரை அரசியலில் பயன்படுத்த வேண்டாம் என்று ரசிகர்களைக் கேட்டு கொண்டவர். என் அரசியலை நான் ஓட்டு போடும் போது வாக்குப்பெட்டியில் தான் காட்டுவேன் என்று தெளிவாகக் கூறியவர். இதனால் தான் அவரைச் சுற்றி தல தலன்னு ஓடுறாங்க..” என்று பாண்டே அஜீத்துடன் பழகிய நாட்களை பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்தார்.

Published by
John

Recent Posts