கந்த சஷ்டி: ஏழாம் நாள் விரதத்தை அனுசரிப்பது ஏன்? விரதம் முடிந்த கையோடு இதை சாப்பிடுங்க முதல்ல…!

கந்த சஷ்டி விரதத்தின் 7ம் நாள் (19.11.2023) ஞாயிற்றுக்கிழமை நாம் எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

இந்த நாளில் நாம் வேண்டிய வரங்கள் அனைத்தையும் தரக்கூடிய அற்புதமான நாள். சம்ஹாரம் முடித்ததும் மணக்கோலத்தில் இருந்து நமக்கு வேண்டிய வரங்களைத் தருகிறார். 6 நாள் தொடர்ந்த விரதத்தைப் பூர்த்தி செய்து சுவாமிக்கிட்ட நம் பிரார்த்தனைகளை எல்லாம் சொல்லக்கூடிய நேரம் மிக மிக முக்கியம்.

அப்போது சம்ஹாரம் முடித்து மனநிறைவுடன் இருக்கிறார். அப்படியே நாம் அவரை விட்டு விட வேண்டும். சிக்கலில் முருகன் வேல் வாங்குகிறார். சுவாமிக்கு விக்கிரகம் வைத்து நாம் வழிபடும்போது அவருக்கு வியர்வைத்துளிகள் முகத்தில் முத்து முத்தாக வழிகிறது.

அவர் போருக்குப் போடத் தயாராகிறார். அதனால் சுவாமி போர் முடிந்ததும் வள்ளி திருமணம் முடித்து மனநிறைவோடு நிம்மதியாக இருக்கிறார். இந்த நேரத்தில் முருகா 6 நாளா உனக்காகத் தான் விரதம் இருந்தேன். என் மேல் கொஞ்சம் கருணைக்காட்டு. கடைக்கண்ணால பாருன்னு கேட்கும்போது உடனே முருகப்பெருமான் சந்தோஷமாகக் கொடுத்துவிடுவார்.

அதனால் தான் 7ம் நாளில் நாம் விரதத்தைப் பூர்த்தி செய்கிறோம். அதனால் திருக்கல்யாணம் முடிந்ததும் கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு உங்கள் விரதத்தை நிறைவு செய்யலாம்.

வீட்டுக்கு வந்து சுவாமிக்கு தயிர் சாதம் நைவேத்தியம் செய்யலாம். அன்று பாவாடை தரிசனம்னு சொல்வாங்க. சுவாமியைக் குளிர்விக்க இப்படி செய்றாங்க. அல்லது சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாக படையல் வைக்கலாம்.

Sikkal singaravelar
Sikkal singaravelar

சற்கோண தீபம் ஏற்றி, நெய் தீபத்தில் முருகப்பெருமானை மனமுருக பிரார்த்தனை பண்ணி என்னுடை பிரார்த்தனை கண்டிப்பாக நிறைவேற வேண்டும்.

அடுத்த ஆண்டுக்குள் எங்களுக்கு குழந்தைப்பேறு வாய்க்க வேண்டும். பிற வேண்டுதல்களையும் வைக்கலாம். இந்த விரதம் விடும்போது கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பிங்க. முதலில் தண்ணீர் குடிங்க. பால், பழச்சாறு குடிங்க. சிட்ரிக் அமிலம் உள்ள பழங்களை சாப்பிடாதீங்க. காரம் இல்லாத எளிமையான உணவுகளை சாப்பிடுங்க.

கீரை சாப்பிடலாம். ஜவ்வரிசியை ஊற வைத்து வேக வைத்து எடுங்க. அதனுடன் தயிர், வெண்ணை சேர்த்து பச்சைமிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு எல்லாம் தாளிச்சி அதில போடுங்க. கொஞ்சம் உப்பு சேர்த்துக்கலாம். இப்படி செய்ததும் அதை சாப்பிட்டால் உடலில் ஏற்பட்ட உஷ்ணம் குறைந்து உடல் இயல்பு நிலைக்கு மாறிவிடும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...