சன் டிவிக்கு வந்த விபரீத ஆசை.. ஆனால் பாருங்க என்னாச்சுன்னு தெரியுமா.. பழைய கதை பாஸ்!

சன் டிவியை பொறுத்தவரை சீரியல் தான் பிரதானம், படத்தையே குறைத்துவிட்டார்கள். படம் போடும் நேரம் என்பது 3.30 மணி முதல் 6.00 மணி வரை தான். இதற்குள் மட்டுமே படம் போடுகிறார்கள். மற்ற நேரம் எல்லாமே சீரியல். 2011,12ம் ஆண்டுகளில் 18 சீரியல் ஓடிக்கொண்டிருந்தது.

இப்போதும் அந்த எண்ணிக்கையில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அப்போது படங்களை வாரவிடுமுறைகளில் போடுவார்கள். அதேபோல் ஏதாவது விடுமுறை வந்தால் படம் தன் பிரதானமாக இருக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை. ஞாயிறு இரவு கூட சீரியல் ஓடுகிறது. வாரத்தின் ஏழு நாளும் சீரியல் ஓடுகிறது. வாரத்தின் ஆறு நாட்கள் அனைத்து சீரியல்களும், ஞாயிறு மட்டும் இரவு 9.30 மணி தொடங்கி சீரியல்கள் ஓடுகிறது.

சன் டிவி சீரியல்களால் புகழ் பெற்றாலும், அவர்களுக்கு ஒரு விபரீத ஆசை வந்தது. மாஸ்டர் செப் கனடா, மாஸ்டர் செப் அமெரிக்கா என்று வெளிநாடுகளில் உள்ளது போல் சமையல் கலைஞர்களை வைத்து ஷோ பண்ணலாம் என்று விரும்பினார்கள். விஜய்டிவியில் பிக்பாஸ் பேமஸாக ஓடிக்கொண்டிருந்ததால் அதற்கு போட்டியாகவே பெரிய அளவில் சன் டிவி ரியாலிட்டி ஷோ செய்தது. விஜய் சேதுபதியை வைத்து பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்தது. ஆனால் அந்த ஷோவிற்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை. சீரியல்களை தான் மக்கள் விரும்பினார்கள்.

மாஸ்டர் செப் போன்ற தரமான புரோகிராம்களை மக்களை பார்க்க வைக்க விரும்பிய சன்டிவியால் அதுபோல் புரோகிராம்களை கொண்டுவர முடியவில்லை. காரணம் மக்கள் சீரியல்களை விரும்பியதால் அதே பாணிக்கு மாறிவிட்டார்கள்.

பல முறை இதேபோல் முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. அதேநேரம் பல்லாண்டுகளாக டிஆர்பியில் முதல் இடத்தில் சன்டிவி தான் உள்ளது. சன்டிவியை முந்த விஜய்டிவியால் இன்று வர முடியவில்லை.. அதேநேரம் ரியாலிட்டி ஷோக்களில் விஜய்டிவி போல் சன்டிவியால் இன்று வரை வர முடியவில்லை. அந்த குறை சன்டிவிக்கு இப்போதும் இருக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...