IAS, IPS அதிகாரிகள் தூக்கிக் கொண்டாடும் மாமனிதர்.. யார் இந்த சைதை துரைசாமி?

அசுரன் படத்தில் தனுஷ் கிளைமேக்ஸில் ஒரு வசனம் பேசுவார். நம்மகிட்ட காசு இருந்தா புடுங்கிடுவாங்க.. சொத்து இருந்தா புடுங்கிடுவாங்க.. ஆனா நம்ம கிட்ட இருக்கிற கல்வியை மட்டும் யாராலும் எடுத்துக்க முடியாது. நல்லா படிக்கனும் என்று கூறுவார். அதை நிரூபிக்கும் வகையில் இன்று தனது அறக்கட்டளை மூலமாக எண்ணற்ற IAS, IPS போன்ற குடிமைப்பணி அதிகாரிகளை உருவாக்கியவர்தான் இந்த சைதை துரைசாமி.

‘வாத்தி’ படத்தில் வருவது போல தனது மையம் மூலமாக அரசுப் பணிகள் மற்றும் குடிமப் பணிகள் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்தி அவற்றில் சாதித்தும் காட்டியிருக்கிறார் இந்த மாமனிதர். கரூரைப் பூர்வீகமாகக் கொண்ட துரைசாமி சென்னைக்கு வந்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக இருந்த  சைதை துரைசாமி  அதிமுகவின் முக்கிய பிரமுகர் ஆவார்.  சைதாப்பேட்டை தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் இவர் சைதை துரைசாமி என்று அறியப்படுகிறார். மேலும் அஇஅதிமுகவின் முதல் சென்னை மேயர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

பிரசவமா? தேர்வா? இளம்பெண் ஸ்ரீபதி எடுத்த துணிச்சல் முடிவால் 23 வயதில் தட்டித் தூக்கிய நீதிபதி பதவி

தீவிர அரசியல்வாதியாக இருந்தாலும் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் தொண்டு செய்வதையே முழுநேரப் பணியாக்கி மனித நேய அறக்கட்டளை என்னும் அமைப்பினை உருவாக்கினார். இந்த அமைப்பின் மூலம் கஷ்டப்படுகிற, படிக்க இயலாத, திறமைகள் இருந்தும் வசதி இல்லாத மாணவர்களுக்கு பண உதவியும், தகுந்த திறன் பயிற்சிகளையும் தனது அமைப்பின் மூலமாக திறம்படச் செய்து வருகிறார்.

அதிக அளவு தான தர்மங்கள் வழங்குவதில் ஈடுபாடு கொண்ட துரைசாமி இதுவரை எந்த ஒரு எம்.எல்.ஏவும் செய்யாத வகையில் 1984 -ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தனது தொகுதி மக்கள் அனைவருக்கும் இலவசமாக டைப் ரைட்டிங், ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளும் வசதியை அமைத்துக் கொடுத்தார். மேலும் சென்னை வேளச்சேரியில் இவர் வைத்துள்ள திருமண மண்டபத்தில் ஏழை மக்கள் இலவசமாக தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளவும் வழிவகை செய்து தருகிறார்.

இப்பேர்பட்ட நல்ல மனதுடைய சைதை துரைசாமிக்கு யார் கண் பட்டேதோ தெரியவில்லை. தற்போது தனது மகனான வெற்றி துரைசாமியை விபத்தில் இழந்து புத்திர சோகத்தில் தவித்து வருகிறார். இருப்பினும் இறுதிஅஞ்சலியில் தனது மகன்பற்றிக் குறிப்பிடும் போது எனக்கு வெற்றியைப் போல பல ஐஏஎஸ், ஐபிஎஸ் பிள்ளைகள் இருக்கின்றனர் என்று மனமுருகி கண் கலங்கி பேசினார். நடிகர் அஜீத்தும் வெற்றி துரைசாமியும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
John

Recent Posts