பிரசவமா? தேர்வா? இளம்பெண் ஸ்ரீபதி எடுத்த துணிச்சல் முடிவால் 23 வயதில் தட்டித் தூக்கிய நீதிபதி பதவி!

திருவண்ணமாலை ஜவ்வாது மலைப்பகுதி பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஸ்ரீபதிக்கு அது ஒரு இக்கட்டான சூழல்.  தமிழக அரசின் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் நீதிபதி பதிவிக்கு மறுநாள் எழுத்துத் தேர்வு. ஆனால் முதல் நாள் அவருக்கு பிரசவ வலி ஏற்பட நல்லபடியாக குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். இதுவே நம்மில் பெரும்பாலனோர் சொல்வது என்ன? தேர்வினை பிறகு பார்த்துக் கொள்ளலாம். இந்த நிலையில் தேர்வெழுத முடியாது என்பதுதான்.

தமிழக அரசவைக் கவிஞரான கண்ணதாசன்..பதவியை முன்கூட்டியே தனது பாடலில் கணித்த கவியரசர்

ஆனால் ஸ்ரீபதி மனம் தளரவில்லை. கணவரை துணைக்கு அழைத்தார். ஒரு காரில் தேர்வு நடக்கும் மையத்திற்கு பச்சிளங்குழந்தையுடன் சென்று தேர்வெழுதினார். தேர்வின் முடிவு என்னவாக இருக்கும் என்று காத்துக்கொண்டே குழந்தையை வளர்த்தவருக்கு அண்மையில் வெளியான அந்த முடிவுகள் அவர் சமுதாயத்தையே ஒருபடி மேலே உயர்த்தி பெண்ணிணத்திற்கும், தனது சமுதாயத்திற்கும் நீங்கா பெருமையைத் தேடித் தந்திருக்கிறார்.

ஸ்ரீபதி சாதித்து அரசுப் பணியை மட்டும் அல்ல. விளிம்பு நிலையில் உள்ள ஒரு  சமுதாயத்தின் வளர்ச்சிக் கனவை. தன்னம்பிக்கையின் நாயகியாக விளங்கி இன்று தமிழகம் முழுவதும் அறியப்படும் பெண்ணாக வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் இந்த இளம் நீதிபதி.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஸ்ரீபதி, பள்ளிக் காலங்களில் வறுமையில் போராடி கல்வி பயின்று சமுதாயத்திற்கு தன்னால் மாற்றம் கொண்டுவர வேண்டுமென பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பை முடித்தார். சட்டப்படிப்பை படிக்கும் போதே ஸ்ரீபதிக்கு திருமணமானது.

இந்தச் சூழலில் டிஎன்பிஎஸ்சி மூலம் சிவில் நீதிபதிக்கான தேர்வு அறிவிக்கப்படுகையில் அதற்கு விண்ணப்பித்து கடுமையாகப் படித்து தயாராகி வந்திருக்கிறார். இன்று அவரின் கடின உழைப்பிற்கு கைமேல் பலன் கிடைத்தது. சமீபத்தில் சிவில் நீதிபதி தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில் ஸ்ரீபதி வெற்றி பெற்றிருந்தார். இதன் மூலம் பழங்குடி இனத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டின் முதல் பெண் சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார் ஸ்ரீபதி. மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்ற பழமொழிக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து இன்று அரசுப் பணிக்குத் தயாராகும் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் நம்பிக்கை விளக்காய் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீபதி. வாழ்த்துக்கள் நீதிபதியே…!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews