பிளே ஆப் போட்டி வாய்ப்பில் புதிதாக நுழைந்த ராஜஸ்தான்.. இடியாப்ப சிக்கலில் ஐபிஎல்..!

நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றதை அடுத்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு கொண்ட அணிகளில் ஒன்றாக ராஜஸ்தான் அணியும் மாறி உள்ளது.

நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி 188 என்ற இலக்கை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்த நிலையில் ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 189 எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. இதனை அடுத்து ராஜஸ்தான் அணி 14 போட்டிகளில் ஏழு போட்டிகளில் வென்று 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் அணிக்கு இனிமேல் போட்டிகள் இல்லை என்பதால் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து அந்த அணி பிளே ஆப் சுற்றில் நுழையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த நிலையில் இன்று டெல்லி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ள நிலையில் இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் நாளை மோத இருப்பதை அடுத்து இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமானது. கொல்கத்தா அணி மிக அபாரமான ரன் ரேட்டில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று செல்வதற்கு ஒரு வாய்ப்பு இருக்கும் என்பதும் லக்னொ அணி வெற்றி பெற்றாலே அடுத்த சுற்று செல்வது உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மே 21ஆம் தேதி மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கும் மே 22ஆம் தேதி பெங்களூர் மற்றும் குஜராத் அணிகளுக்கும் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இந்த போட்டிகள் மிகவும் முக்கியமானது என்பதும் இந்த இரு அணிகளும் இந்த அந்தந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் கூட எந்த அணி அடுத்த சுற்று செல்லும் என்பதை கணிக்க முடியாத நிலையில் உள்ளது. சென்னை, லக்னோ, பெங்களூரு, ராஜஸ்தான், மும்பை, கொல்கத்தா ஆகிய ஆறு அணிகளில் எந்த மூன்று அணிகள் வேண்டுமானாலும் அடுத்த சுற்று செல்லும் வாய்ப்பு இருப்பதால் முன் எப்போதும் இல்லாத அளவில் இடியாப்ப சிக்கலில் தற்போது ஐபிஎல் போட்டிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews