நான் எந்த கதை யோசிச்சாலும் இந்த ஹீரோ தான் நினைவிற்கு வருவார்… மாரி செல்வராஜ் ஓபன் டாக்…

மாரி செல்வராஜ் எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ என்ற சிறுகதை தொகுப்பின் ஆசிரியர். பத்திரிகையாளராக சில வருடங்கள் பணிபுரிந்த மாரி செல்வராஜ் ஆனந்த விகடனில் ‘மறக்க நினைக்கிறேன்’ என்ற தொடரை எழுதியுள்ளார்.

இயக்குனர் ராமிடம் 10 வருடங்களுக்கு மேலாக உதவி இயக்குனராக பணியாற்றினார். 2018 ஆம் ஆண்டு ‘பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படம் பல நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று பல விருதுகளையும் வென்றது.

அதற்கு அடுத்து 2021 ஆம் ஆண்டு நடிகர் தனுஷுடன் ஜோடி சேர்ந்து ‘கர்ணன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றிப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அடுத்ததாக 2023 ஆம் ஆண்டு ‘மாமன்னன்’ என்ற படத்தை இயக்கினார்.

பொதுவாக மாரி செல்வராஜின் திரைப்படங்கள் மக்களின் குரலை வெளிப்படுத்துவது போல் இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயங்களை இவர் படங்களில் பேசியிருப்பார். தற்போது ஒரு நேர்காணலில் தான் எடுக்கும் படங்களைப் பற்றி பேசியுள்ளார்.

அதில் நான் எந்த கதையை இயக்குவதற்கு யோசித்தாலும் அதில் நடிப்பதற்கு தனுஷ் தான் என் மனதில் தோன்றுவார். அப்படிதான் மாமன்னன் பட கதையிலும் தோன்றியது. உதயநிதி அவர்களிடம் கதையை சொல்லி ஓகே வாங்கிவிட்ட பிறகு தனுஷ் அவர்களிடம் பேசினேன். மாமன்னன் கதையை கூறவா என்று கேட்டேன். அதற்கு அவர் வேண்டாம் நீங்கள் கதையை கூறினால் நான் அதில் நடிக்க வேண்டும் என்று அடம் பிடிப்பேன், அதனால் படத்தை எடுத்து முடித்துவிட்டு காட்டுங்கள் என்று கூறினார். அதே போல் ‘மாமன்னன்’ படத்தை எடுத்து முடித்துவிட்டு காட்டினேன். அப்போது நான் இந்த படத்தில் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தனுஷ் அவர்கள் சொன்னார் என ஓப்பனாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...