விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘பேமிலி ஸ்டார்’ ரிலீஸ் எப்போது…?

‘குஷி’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் தேவரைகோண்டாவின் அடுத்த படமான ‘பேமிலி ஸ்டார் ‘ ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்பு இப்படத்தின் முதல் பாடலான ‘நந்தநந்தன’ என்கிற பாடல் சமீபத்தில் வெளியானது. வெளியான சிறிது நாட்களிலேயே சமூக வலைத்தளங்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ‘பேமிலி ஸ்டார்’ படத்தின் டீஸர் இன்று வெளியாகி உள்ளது. பரசுராம் பெட்லா இப்படத்தை எழுதி இயக்குகிறார். கதாநாயகனாக விஜய் தேவரகொண்டாவும் கதாநாயகியாக மிருனாள் தாகூரும் நடிக்கின்றனர்.

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் இயக்குனர் பரசுராமும் 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கீதா கோவிந்தம்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனா ‘பேமிலி ஸ்டார்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

‘பேமிலி ஸ்டார்’ படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். ‘கீதா கோவிந்தம்’ புகழ் கோபி சுந்தர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணிகளை கு. மோஹனன் மற்றும் மார்தாண்ட் கே. வெங்கடேஷ் செய்தனர். இப்படத்தின் ப்ரொடெக்ஷன் டிசைனை எ. எஸ். பிரகாஷ் வடிவமைத்திருக்கிறார் மற்றும் கிரியேடிவ் தயாரிப்பாளராக வாசு வர்மா பணியாற்றியுள்ளார். வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி இப்படத்தை பிரம்மாண்டமாக தியேட்டரில் வெளியிட போவதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் ஒரு நடுத்தர கணவனின் சாதாரணமான வாழ்க்கையை எடுத்துரைப்பதாக இப்படம் இருக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ‘பேமிலி ஸ்டார்’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...