கொல்லிமலை ரகசியம் என்றால் என்ன

யாராவது ஒரு விசயத்தை சொல்ல மாட்டேன் என்று சொன்னால் பெரிய கொல்லிமலை ரகசியம் என்று விளையாட்டாய் சொல்வதுண்டு. காலம் காலமாய் சொல்லப்பட்டு வரும் விசயம் இது. கொல்லிமலை ரகசியம் என்றால் என்ன.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்களம் அடுத்து உள்ளது கொல்லிமலை. சேந்த மங்களத்தில் இருந்து மலை மேலே 25 கிமீக்கும் மேலே மலை ஏறி சென்றால் அறப்பளீஸ்வரர் கோவிலை அடையலாம். கீழே 1200 படி கீழிறங்கி சென்றால் ஆகாய கங்கை அருவியை அடையலாம். அறப்பளீஸ்வரர் கோவிலும் இந்த ஆகாய கங்கை அருவியும் சிறந்த ஆன்மிக உணர்வையும் மகிழ்ச்சியையும் நமக்கு தரும்.

இந்த கொல்லிமலைதான் 18 சித்தர்களின் தலைமையகமாக கருதப்படுகிறது. எத்தனையோ சித்தர்கள் காலம் காலமாக சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இன்றும் பல அதிசயங்களை இங்கிருக்கும் சித்தர்கள் நிகழ்த்துகிறார்கள்.  நோய் தீர்க்கும் மூலிகைகள் பல மூலிகைகள் உள்ளன. சஞ்சீவினி மூலிகை கூட இங்கு இருப்பதாக சொல்வதுண்டு. இங்கு கொல்லிப்பாவை கோவில்தான் இந்த மலையின் காவல் தெய்வம். இந்த கோவில்கள், சித்தர்கள், மூலிகைகள், அமானுஷ்யங்கள் , என இந்த மலை எப்போதுமே ரகசியங்கள் நிறைந்த மலையாக இருப்பதால் இந்த மலையை அடிப்படையாக கொண்டே பெரும்பாலான விசயங்களுக்கு பெரிய கொல்லிமலை ரகசியம் என சொல்வதுண்டு.

Published by
Staff

Recent Posts