ஆர்.கே. சுரேஷுக்கு ஆப்படிக்க பார்த்த யுவன் சங்கர் ராஜா!.. அக்ரீமென்ட் இருக்கு என செக் வச்சுட்டாரே!..

ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே. சுரேஷ் பெயர் அடிபட்ட நிலையில், அவரை கைது செய்ய போலீஸார் முயற்சி செய்த போது அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவாகி விட்டார் எனக் கூறப்பட்டது.

ஆனால், தன் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாக கூறி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் ஆர்.கே. சுரேஷ். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், ஃபைனான்ஸியராகவும், நடிகராகவும் வலம் வருகிறார் ஆர்.கே. சுரேஷ்.

யுவன் சங்கர் ராஜா vs ஆர்.கே. சுரேஷ் மோதல்:

கடந்த 15 ஆண்டுகளாக சினிமாவில் கடுமையாக உழைத்து வருகிறேன். ஒரு செக் பவுன்ஸ் வழக்கு கூட என் பெயரில் இல்லை. நான் எப்படி பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை மோசடி செய்திருப்பேன் என உருக்கமாக பேசியிருந்தார். என்னை காலி செய்ய சிலர் செய்த சதிதான் இது என்றும் காடுவெட்டி இசை வெளியீட்டு விழாவில் ஆர்.கே. சுரேஷ் பேசினார்.

அதன் பின்னர் தென் மாவட்டம் என அடுத்து தான் எழுதி இயக்கவுள்ள படத்தின் போஸ்டரை அவர் வெளியிட்டார். அதில், அந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.

பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடித்த தார தப்பட்டை படத்தில் வில்லனாக அறிமுகமானவர் தான் ஆர்.கே. சுரேஷ். தர்மதுரை படத்தை தயாரித்திருந்தார். அந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிக்கலில் யுவன் சங்கர் ராஜா:

இந்நிலையில், ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் தென் மாவட்டம் படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கப் போவதாக அறிவிப்பு வெளியான நிலையில், அதை பார்த்த யுவன் சங்கர் ராஜா தனக்கும் இந்த படத்துக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை. நான் இந்த படத்தில் பணியாற்றவில்லை. இது முற்றிலும் தவறான தகவல் என அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், இந்த படத்திற்கு இசையமைக்க ஏற்கனவே ஒப்பந்தம் ஒன்றை போட்டிருக்கீங்க, அந்த ஒப்பந்தத்தை நன்றாக படித்துப் பாருங்கள் யுவன் சங்கர் ராஜா என ஆர்.கே. சுரேஷ் யுவன் சங்கர் ராஜாவுக்கு ஆப்பு அடித்துள்ளார்.

இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்று ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் விவாதத்தை ஆரம்பித்துள்ளனர். விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், ஏழு கடல் ஏழு மலை உள்ளிட்ட படங்கள் யுவன் இசையில் உருவாகி வருகின்றன. தென் மாவட்டம் படத்திற்கு யுவன் இசையமைப்பாரா? அல்லது இருவருக்கும் இடையே சண்டை வெடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews